எதுவும் முடியல.. இன்னும் 2 மேட்ச் இருக்கு.. அடுத்து பெரிய வேடிக்கையாக இருக்க போகுது – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
317
Surya

இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து கேப்டன் சூர்யா குமார் யாவும் பேசி இருக்கிறார்.

இந்த இரண்டாவது போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இந்திய அணியின் தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆல் ரவுண்டர் க்ரூரருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்கார ரீசா ஹென்ட்ரிக்ஸ் அணிக்கு திரும்பி வந்திருந்தார்.

- Advertisement -

எதிராக நடந்த விஷயம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடித்திருந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். மேலும் கடந்த போட்டியில் 200 ரன்கள் தாண்டி எடுத்த இந்திய அணி இந்த போட்டியில் வெறும் 124 ரன்கள் மட்டுமே ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் எடுத்தது.

இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி 16 ஓவர்களில் கைவசம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வைத்திருக்க, வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி வென்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களின் அடுத்த மூன்று ஓவர்களை சிறப்பாக எதிர் கொண்டு, தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சூரியகுமார் அக்சர் படேலை ஒரு ஓவருக்கு பயன்படுத்தாதது விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

2 போட்டி இருக்கு நிறைய என்டர்டெயின்மென்ட் இருக்கு

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட் கைப்பற்றி தனி ஒரு வீரராக ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிக் கொண்டு வந்திருந்தார். இதை கடைசியில் வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இது குறித்து பேசிய சூர்யா குமார் யாதவ் “நீங்கள் ஒரு போட்டியில் என்ன ரன் எடுக்கிறீர்களோ அதை நீங்கள் நம்பி களத்தில் இறங்கி பந்து வீச வேண்டும். ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒரு டி20 போட்டியில் 125 முதல் 140 ரன்கள் எடுப்பதை விரும்புவதில்லை. இருந்தபோதிலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் நான் பெருமை அடைகிறேன்”

இதையும் படிங்க : 8 ரன் தேவை 6 பந்து.. நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றி.. இலங்கையின் கோப்பை கனவை கலைத்த பிலிப்ஸ்

“இந்த நிலையில் டி20 போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றுவது ஆச்சரியமான ஒன்று. அதை வருண் சக்கரவர்த்தி செய்து காட்டி இருக்கிறார். அவர் தனக்கான பெரிய மேடைக்கு காத்திருந்தார். அதற்காக அவர் நிறைய கடினமாக உழைத்து இருக்கிறார். இது அவரின் சிறந்த பர்பாமன்ஸ். இன்னும் இரண்டு கேம்கள் இருக்கிறது. நிறைய பொழுது போக்கும் இருக்கிறது. அடுத்து ஜோகனஸ்பர்க்கில் வேடிக்கையாக இருக்கப் போகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -