2027 ODI உலக கோப்பையில்.. விராட் ரோகித் ஆடுவார்களா? – கேப்டன் கில் வெளிப்படையான பதில்

0
176
Gill

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆடுவார்களா? என்பது குறித்து கேப்டன் சுப்மன் கில் வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

- Advertisement -

அகர்கரின் குழப்பமான கருத்து

இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாக இல்லை என்று தெரிவித்திருந்தார். குறைந்தபட்சம் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இரண்டு ஜாம்பவான் வீரர்களும் உலகக் கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இரண்டு பெரிய வீரர்களையும் ஒதுக்கி ஓய்வு பெற வைத்து விட்டார் என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

கில் வெளிப்படை பதில்

இது குறித்து சுப்மன் கில் பேசும் பொழுது “ரோகித் சர்மா, விராட் கோலி பாயிடம் இருக்கும் திறமை வெகு சில வீரர்களிடம் மட்டுமே இருக்கிறது. அவர்கள் இந்திய அணியை தனியாக வெற்றி பெற வைத்தது போல உலகக் கிரிக்கெட்டில் சில வீரர்கள் மட்டுமே செய்து இருக்கிறார்கள். எந்த வகையான திறமை எப்பொழுதும் எல்லோருக்கும் இருக்காது”

இதையும் படிங்க : கேப்டனா கில் வந்தது சரிதான்.. ஆனா ரோகித் கோலிய இத செய்ய சொல்லணும்.. இல்லனா தூக்கணும் – அஸ்வின் பேச்சு

“எனவே இவர்கள் இருவரும் எப்பொழுதும் முக்கியமானவர்கள். மேலும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்திய அணி கலவையில் இருவருமே இருக்கிறார்கள். ரோகித் சர்மா பாயிடம் இருந்து கேப்டன்சி கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் அணிக்கு காட்டும் அமைதி மற்றும் நட்பு எனக்கு பெரிய விருப்பமாக இருந்திருக்கிறது. நான் அவரிடமிருந்து இதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -