நான் கேப்டன் பொறுப்பில்.. இந்த விஷயத்தில் விராட் ரோஹித் பாய்களிடம் கூச்சப்பட மாட்டேன் – சுப்மன் கில் பேச்சு

0
91
Gill

நாளை ஆஸ்திரேலியா மணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு கூச்சப்பட மாட்டேன்

இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்து பேசி உள்ள சுப்மன் கில் ” நான் சிறுவனாக இருந்த பொழுது விராட் கோலி பாய் மற்றும் ரோஹித் சர்மா பாய் இருவரையும் என்னுடைய ஐடியல் வீரர்களாக வைத்திருந்தேன். அவர்களுடைய வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வம் என்னை ஈர்த்தது. இவ்வளவு பெரிய புகழ்பெற்ற வீரர்களை வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு பெரிய பாக்கியம். இவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும் எனக்கு பெருமையான விஷயம்”

“இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கூட அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் அமையும் என்று நினைக்கிறேன். மேலும் களத்தில் நான் ஒரு கடினமான சூழ்நிலையில் சிக்கினால், இருவரிடமும் ஆலோசனைகள் கேட்க கொஞ்சமும் கூச்சப்பட மாட்டேன்”

- Advertisement -

இதைக் கற்றுக் கொண்டு விட்டேன்

“நான் விளையாடும் போது இருவரிடமிருந்து நான் சில விஷயங்களை கவனித்தேன். அவர்கள் விளையாடும் போது அதில் எனக்கு பிடித்த விஷயங்கள் சிலது இருக்கின்றன. அவர்கள் எப்படி பேசுவார்கள்? வீரர்களுடன் எப்படிப்பட்ட தொடர்பு வைத்திருந்தார்கள்? செய்தி பரிமாற்றம் எப்படி செய்தார்கள்? இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்”

இதையும் படிங்க : டீமை செலக்ட் பண்றதுல எனக்கும் டிராவிட்டுக்கும் பிரச்சனை இருந்துச்சு.. அது முட்டாள்தனமா போயிடும் – அகர்கர் பேச்சு

“மேலும் ஒரு கேப்டனாக இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தின் படியே நானும் நடக்க விரும்புகிறேன். என் தலைமையின் கீழ் வீரர்கள் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உணர வேண்டும். நான் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறேன் என்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -