என்னால உண்மையா தொடர்ந்து இந்த வேலையை செய்ய முடியல.. இப்ப 2 புது பசங்கள கொண்டு வந்து இருக்கேன் – ருதுராஜ் பேட்டி

0
50
Ruturaj

இன்று சிஎஸ்கே அணி லக்னோ மணிக்கு எதிராக ஏகனா மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு மூன்று போட்டிகள் மீதம் உள்ளது இதில் குறைந்தது 2 போட்டிகளையாவது வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். எனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் லக்னோ அணியை வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு

கடந்த போட்டியில் காயமடைந்த ஜேமி ஓவர்டன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் மிகப்பெரிய திருப்புமுனையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்து வந்தார். தற்போது அவர் இல்லாதது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இவருடைய இடத்தில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் பிரசாந்த் வீரை வைத்துக்கொண்டு அகேல் ஹூசைனை நீக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

இது கடினமானது

இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “மஞ்சள் ஜர்சியை அணிவது எப்பொழுதும் பெருமையான விஷயம். இந்த மைதானம் நீங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய மைதானம் ஆகும். தற்போது ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். இதை சமாளித்து 170 முதல் 180 ரன்கள் எடுத்தால் போட்டியை வெல்ல முடியும்”

இதையும் படிங்க : கார்த்திக் சர்மா வேலைக்காகவே மாட்டார்.. இந்த பையனை 4வது இடத்தில் ஆட வைங்க.. இல்லனா பிளே ஆப் போக முடியாது – ஸ்ரீகாந்த் அட்வைஸ்

“அணியில் தொடர்ந்து பல மாற்றங்களை வீரர்களின் காயத்தால் செய்து கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. இது உண்மையில் மிக கடினமானதாக இருக்கிறது. ஆனால் இது நாம் கட்டுப்படுத்த முடியாத நம் கையில் இல்லாத விஷயம். இந்த போட்டி நாங்கள் வென்றே ஆக வேண்டியதாக முன்பிருந்து இருக்கிறது. நாங்கள் எப்போதும் போல ஒவ்வொரு போட்டியாகவே எடுத்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -