இந்திய அணி உள்நாட்டில் 12 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்திருக்கிறது. இருந்தபோதிலும் இந்திய அணி எதையும் வித்தியாசமாக செய்ய தேவை இல்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இந்தியா வந்து இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பது பலரையும் ஆச்சரியத்துக்கு உட்படுத்தி இருக்கிறது.
இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “இந்த தோல்வியை நான் பெரிது படுத்தப் போவது கிடையாது. குறிப்பிட்ட வீரர்களுடன் நாம் பேச வேண்டும். மேலும் இது குறித்து ஒரு மூலையில் அமர்ந்து விவாதிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. குறிப்பாக இந்த நேரத்தில் இளம் வீரர்களை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்”
“நாங்கள் 12 வருடம் உள்நாட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். பெரிய விஷயங்களை செய்திருக்கிறோம். எனவே இந்த தோல்வி குறித்து வித்தியாசமாக பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவுமே கிடையாது என்று நினைக்கிறேன். நாங்கள் எதை செய்யவில்லை? எதைச் செய்ய வேண்டும் என ஆலோசிப்போம். ஆனால் உடனடியாக எல்லாவற்றையும் மாற்றி அமைப்பது போல எதையும் செய்ய அவசியம் இல்லை”
“தற்போது நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து எதுவும் யோசிக்கவில்லை. அது தூரத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். மேலும் தற்போதைய தோல்வி இறுதிப் போட்டி வாய்ப்பை பாதிக்குமா? என்றும் நான் யோசிக்கவில்லை. தொடரை இழந்ததால் நான் வேதனைப்படுகிறேன். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியை என்றாலும் தோற்றாலும் அதற்கு அனைவருமே தகுதியானவர்கள்”
இதையும் படிங்க : 2025 WTC பைனல் போக.. இந்தியா என்ன செய்ய வேண்டும்.. மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு? – முழு விபரம்
“இந்த தோல்வி குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் எதையும் செய்ய தேவையில்லை. மேலும் திட்டம் மற்றும் செயல்முறையை நாங்கள்நம்ப விரும்புகிறோம். நியூசிலாந்து வீரர்களும் இதையே செய்தார்கள். நாங்களும் இதையே செய்தோம். இப்படியான விஷயங்கள் நடக்கக் கூடியதுதான்”