ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. தோல்விக்கு முக்கிய காரணம் பும்ராவுக்கு நடந்த அதுதான் – ரோகித் சர்மா விளக்கம்

0
4466
Rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

இன்று இந்திய அணி 90 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடினால் டிரா செய்ய முடியும் என்ற நிலையில், முதல் இரண்டு செசன்கள் சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட் மட்டும் இழந்திருந்தது. எனவே போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி செசனில் ஏழு விக்கெட் கொடுத்து 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

மிகுந்த ஏமாற்றமாக உள்ளது

இதுகுறித்து கேப்டன் கேப்டன் ரோஹித் சர்மா பேசும் பொழுது “இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. நாங்கள் போட்டியை விட்டுக் கொடுப்பதற்காக உள்ளே செல்லவில்லை. நாங்கள் போராடுவதற்காக சென்றோம். துரதிஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாக போராடியது”

“இதன் காரணமாக எங்களுக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக இவ்வளவு பெரிய இலக்கை இங்கு துரத்த முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே எங்கள் வழியில் நாங்கள் இந்த போட்டியை டிரா செய்வதற்கு விளையாடினோம். இறுதியில் எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை”

- Advertisement -

பும்ராவுக்கு அது நடக்கவில்லை

“நிதீஷ் குமார் இங்கு முதன் முதலில் வருகிறார். அவருக்கு இங்குள்ள கண்டிஷன் மிகவும் கடினமாக இருந்திருக்கலாம். அவர் சிறந்த கேரக்டரையும் நல்ல டெக்னிக்கையும் வெளிப்படுத்தி விளையாடினார். அவர் இங்கு வெற்றி பெறுவதற்கு எல்லாவற்றையும் கொண்டிருக்கிறார். அவர் வலிமையிலிருந்து வலிமைக்கு செல்கிறார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 34 ரன் 7 விக்கெட்.. ஈஸி டிராவை வீணடித்த இந்தியா.. ஆஸி அணி கடைசி நேரத்தில் அபார வெற்றி

“பும்ரா ஒரு பிரில்லியன்ட். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் என்ன செய்கிறார் என்பதை நாங்கள் பார்த்துதான் வருகிறோம். அவர் புள்ளி விபரங்களால் பார்க்கக் கூடியவர் இல்லை. அவர் நாட்டிற்காக போட்டிகளை வெல்வதற்காக வந்து எதையும் செய்ய தயாராக இருக்கிறார். துரதிஷ்டவசமாக பந்துவீச்சில் அவருக்கு இன்னொரு முனையில் நல்ல ஆதரவு கிடைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -