34 ரன் 7 விக்கெட்.. ஈஸி டிராவை வீணடித்த இந்தியா.. ஆஸி அணி கடைசி நேரத்தில் அபார வெற்றி

0
1455
Australia

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 474 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஸ்மித் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் எடுத்தார். பும்ரா இந்திய அணியின் தரப்பில் நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 50, நிதீஷ் குமார் ரெட்டி 114 ரன்கள் எடுக்க, இந்திய அணி 369 ரன்கள் குவித்தது. கம்மின்ஸ் போலன்ட் மற்றும் லயன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

கலக்கிய நாதன் லயன் போலன்ட்

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. அந்த இடத்தில் லபுசேன் மற்றும் கம்மின்ஸ் கேட்ச் வாய்ப்புகளில் தப்பித்து 70 மற்றும் 41 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு கடைசி விக்கெட்டுக்கு நாதன்யன் மற்றும் போலந்து சேர்ந்து 61 ரன் சேர்த்தார்கள். நாதன் லயன் 41 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி 234 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 340 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பும்ரா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் தந்த திருப்புமுனை

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 9, கேஎல்.ராகுல் 0, விராட் கோலி 5 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் சிறந்த முறையில் ஆட்டத்தை நகர்த்திச் சென்றார்கள். ஆனால் தேவையில்லாமல் ஹெட் பந்துவீச்சில் அடிக்க சென்ற ரிஷப் பண்ட் 104 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : ரோகித்தைப் பற்றி அந்த விஷயம் சொல்ல முடியாது.. ஆனா அவர் இதுக்கு நிச்சயம் தேவை – கங்குலி கருத்து

இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா 2, நிதீஷ் குமார் ரெட்டி 1, ஜெய்ஸ்வால் 84, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, சிராஜ் 0 ரன்னில் ஆட்டம் இழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 45 பந்து சந்தித்து ஆட்டம் இழக்காமல் ஐந்து ரன்கள் எடுத்து களத்தில் இருந்தால். இந்திய அணி 155 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 184 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கம்மின்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -