இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 ஆறாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.
ராஜஸ்தான் அணி தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே குவித்தது. தொடக்கத்திலிருந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார்கள். அந்த அணியை பொறுத்தவரை மிடில் வரிசை பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் அதிகபட்சமாக 33 ரன்கள் குவித்தார். கேப்டன் ரியான் பராக் 25 ரன்னில் வெளியேறினார்.
அதற்குப் பிறகு வெற்றிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் தனது அனுபவ ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினார். 61 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இது ராஜஸ்தான் அணிக்கு தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாகும்.
கேப்டன் ரியான் பராக் பேட்டி
இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறும்போது “170 ரன்கள் என்பது உண்மையில் எதிரணிக்கு நல்ல இலக்காக இருந்திருக்கும். அந்த இலக்கை தான் நாங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விளையாடினோம். ஆனால் நானும் கொஞ்சம் அவசரப்பட்டு விளையாடினேன். 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். கொல்கத்தா தொடக்க வீரரை விரைவிலேயே ஆட்டம் இழக்க செய்ய வேண்டும் என்பதுதான் எனது திட்டம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் நாங்கள் மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்தும் நிலைக்கு மாறினோம்.
இதையும் படிங்க:97 ரன்.. கேகேஆர் வீரர் சிறப்பான ஆட்டம்.. சுழலில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி.. 8 விக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி
அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பாராட்டுக்கள். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியா? என்று கேட்கிறீர்கள். கடந்த ஆண்டு நான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தேன். இந்த வருடம் ஒரு இடம் மேலே என்னை அனுப்புகிறார்கள். எந்த இடத்தில் விளையாடினாலும் ஒரு தொழில் நிபுணராக நான் அதில் சிறப்பாக இருக்க வேண்டும். நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எங்களிடம் இளைய அணி உள்ளது. சிறிய கட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். ஒரு நல்ல போட்டியை ஒன்றாக இணைக்க வேண்டிய நேரம் இது. நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை எடுத்துக் கொள்கிறோம், எங்கள் தவறுகளை சரி செய்து கொள்ளப் போகிறோம். எனவே இந்த தவறுகளை சரி செய்து சென்னை அணிக்காக மீண்டும் திரும்பி வரப் போகிறோம்” என்று அவர் பேசி இருக்கிறார்.






