நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தங்களது சொந்த மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தங்கள் அணியின் தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளை தோற்று இருந்தது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான அணியாக கணிக்கப்பட்டு இருந்த லக்னோ அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்கு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் நுழைந்திருந்தது. எனவே இந்த போட்டியை வென்றால் பிளே ஆப் சுற்றும் வாய்ப்பை ஏறக்குறைய எளிதாக்கலாம் என்கின்ற நிலை இருந்தது.
ரிஷப் பண்டின் போராட்டம்
நேற்றைய ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன்களுக்கு செல்ல முடியவில்லை. முதலில் பேட்டிங் செய்த லக்னோ மணிக்கு ஒரு முனையில் நின்று போராடிய கேப்டன் ரிஷபன்ட் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் ஆட்டம் இழக்காமல் சிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் உள்ளே வந்த மகேந்திர சிங் தோனி அதிரடியாக 11 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 26 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிலையில் ரவி பிஷ்னாயிக்கு மீதம் இருந்த ஒரு ஓவரை நேற்று ரிஷப் பண்ட் கொடுக்கவில்லை. அவர் மூன்று ஓவரில் 18 ரன் தந்து இரண்டு விக்கெட் எடுத்திருந்தார்.
ஏன் அவருக்கு ஓவர் தரவில்லை?
இதுகுறித்து பேசியிருக்கும் ரிஷப் பண்ட் கூறும் பொழுது ” நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதை ஒரு அணியாகவே உணர்ந்தோம். எங்களுக்கு நல்ல வேகம் இருந்தபொழுது நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. நான் ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக மெருகேறி வருகிறேன். ஒரு போட்டியை ஒரு நேரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்துகிறோம்”
இதையும் படிங்க : தோனி நிறைய அவமானப்படுறாரு.. ஆனா அத்தனையும் இந்த ஒரு விஷயத்துக்காக பொறுத்துக் கொள்கிறார் – ஆகாஷ் சோப்ரா
“ரவி பிஷ்னாய்க்கு மீதம் இருந்த ஒரு ஓவரை தராதது என்னுடைய முடிவு கிடையாது. நாங்கள் அனைவரும் சேர்ந்து இது குறித்து ஆலோசனை செய்தோம். இறுதியில் அவரை கடைசி ஓவருக்கு கொண்டு வர முடியவில்லை. தற்போது பவர் பிளே பந்துவீச்சு கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் நாங்கள் சில பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் பலவீனமான விஷயங்களை மேம்படுத்த முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.