இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரா தயாரா இருக்கோம்.. ஐபிஎல் எங்களை எதுவுமே செய்ய முடியாது – பேட் கம்மின்ஸ் பேட்டி

நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் போட்டி மற்றும் ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் இரண்டு டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து இழந்திருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு வெல்ல வேண்டிய அவசிய கட்டாயம் இருக்கிறது.

ஆஸ்திரேலிய-இந்திய அணிகளின் தயாரிப்புகள்

இந்த முறை ஆஸ்திரேலியா அணியின் தயாரிப்புகள் குறித்து எந்த விதமான சிறப்பு செய்திகளும் வெளிவரவில்லை. அவர்கள் வழக்கமான பயிற்சியை வழக்கமான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு முக்கிய விஷயமாக அவர்கள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை அதிவேக பெர்த் மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். பொதுவாக இப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை பயிற்சியை பார்க்க ரசிகர்கள் மற்றும் மீடியாக்களுக்கு அனுமதியை கொடுக்கவில்லை. மேலும் கருப்பு கவரை சுற்றி வைத்து பயிற்சி சார்ந்த எந்த விஷயத்தையும் வெளியே கசிய விடாமல் இந்திய அணி நிர்வாகம் பார்த்துக் கொண்டது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இப்படியான தயாரிப்பை மேற்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் சவால்

இந்த நிலையில் முதல் டெஸ்ட் குறித்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது ” எங்களுக்கு தனிப்பட்ட அழுத்தம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் வீட்டில் விளையாடும் பொழுது எப்பொழுதும் ஒரு அழுத்தம் இருக்கவே செய்யும். இந்திய அணி ஒரு திறமையான பக்கம். அதே சமயத்தில் நாங்கள் எல்லாவற்றிற்கும் தயாராகி இருக்கிறோம்”

“எங்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறுவதற்காக கிளம்பி இருக்கிறார். ஆனால் அவர் இங்கு செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார். அவர் இல்லாதது இங்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவது கிடையாது”

இதையும் படிங்க : ஃபாஸ்ட் பவுலர்தான் கேப்டனா இருக்கணும்.. நான் ரோகித் கிட்ட அதை ஏற்கனவே பேசிட்டேன் – பும்ரா பேட்டி

“இது போலவே எங்கள் வீரர்களையும் ஐபிஎல் மெகா ஏலம் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் வீரர்களில் பலர் ஏற்கனவே ஐபிஎல் மெகா இடத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்து ஏலத்தில் எதுவும் செய்ய முடியாது என்று அறிவார்கள். நாங்கள் செய்யப்போவதில்லை ஐபிஎல் மெகா ஏலம் எந்த தாக்கத்தையும் செய்யாது. இது அவ்வளவு பெரிய கவனச் சிதறலை உருவாக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts