தற்போது நடைபெற்று முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தோல்வி அடைந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி படு தோல்வி
இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை சிவம் துபே அதிகபட்சமாக 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொற்பரன்களில் வெளியேறி ஆட்டம் இழந்தனர். இந்த போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு விளையாடிய கொல்கத்தா அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொண்டு விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 44 ரன்கள் குவித்தார். இந்த தோல்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தோல்வி குறித்து கேப்டன் எம்எஸ் தோனி
தோல்வி குறித்து எம் எஸ் தோனி கூறும் போது “பல இரவுகள் நம் பாதையை விட்டு நீங்காமல் போய்விட்டது. ஆனால் நமக்கு இருந்த சவால்கள் அப்படியே இருக்கின்றன. நாம் சவாலை ஏற்று கொள்ள வேண்டும். இன்று நம்மிடம் போதுமான ரன்கள் இல்லை என்பதை உணர்ந்தேன். இரண்டாவது இன்னிங்சின் போது பந்து பேட்டுக்கு சற்று நின்று வந்தது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது அது சற்று சாதகமாக எங்களுக்கு அமையவில்லை.
இதையும் படிங்க:18 வருட ஐபிஎல் தொடரில்.. படு தோல்வியை சந்தித்த சிஎஸ்கே.. தோனி வந்தும் எதுவும் மாறல.. 59 பந்துகள் மீதம்.. கேகேஆர் படைத்த மெகா சாதனை
எங்களுக்கு ஒருபோதும் நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமையவில்லை. தரமான சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக விக்கெட் இழக்கும்போது அழுத்தம் கடினமாக இருக்கும். இதில் குறிப்பாக நாங்கள் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும் என்பதே முக்கியமாகும். எங்கள் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்க வீரர்கள் தான். ஆனால் அவர்கள் நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார்களே தவிர பவுன்டரி எல்லையை தாண்டி அடிக்க தோன்றுவதில்லை. எங்கள் பேட்டிங் வரிசையோடு 60 ரன்கள் தேட ஆரம்பித்தால் அது மிகவும் கடினமாக இருக்கும். தொடக்க வீரர்கள் நன்றாக செயல்பட்டால் மட்டுமே மிடில் வரிசை வீரர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படாமல் இயல்பான ஆட்டத்தை விளையாட முடியும்” என்று தோனி கூறி இருக்கிறார்.






