இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரா.. இந்த விஷயங்கள் நம்பிக்கை தருது.. இந்த முறை விட மாட்டோம் – சான்ட்னர் பேச்சு

நேற்று சாம்பியன்ஸ் டிராபி இரண்டாவது செமி ஃபைனலில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி முதல் செமி பைனலில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தானில் கலக்கிய நியூசிலாந்து

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் அந்த அணிக்கு இந்த மூன்று போட்டிகளில் நான்கு வீரர்கள் சதங்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா இரண்டு சதங்கள் எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி துபாயில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஒரே போட்டியில் மட்டும் தோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஏற்கனவே இங்கு விளையாடி இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருப்பதால் நியூசிலாந்து தனித்திட்டங்களை தீட்டிக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக நம்பிக்கை அளிக்கிறது

இது குறித்து பேசி இருக்கும் மிட்சல் சான்ட்னர் கூறும் பொழுது ” நாங்கள் துபாயில் இருப்பதும், இந்திய அணிக்கு எதிராக அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வருவதும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. மேலும் என்ன வேலை செய்கிறது என்ன வேலை செய்யவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள். டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும்”

இதையும் படிங்க : ஒரே விஷயத்தை தொடர்ந்து பேசுவது வேஸ்ட்.. இந்திய அணியை எப்படி வீழ்த்துவது.? திட்டமே அதுதான் – கேன் வில்லியம்சன்

“இறுதிப் போட்டியில் விளையாடுவது நல்ல உணர்வு. நாங்கள் ஏற்கனவே நல்ல அணியான இந்திய அணியால் சவால் செய்யப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இந்திய அணிக்கு எதிராக போட்டியிட ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு கேன் வில்லியம்சன் தொடர்ந்து ஒரே வேலையை சிறப்பாக செய்து வருகிறார். திடீரென கியரை மாற்றி 320 ரன்கள் என்பதை 360 ரன்கள் கொண்டு வந்தார். ஒருவேளை 320 ரன்கள் எடுத்திருந்தால் நாங்கள் தோல்வி அடைந்திருப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by