இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு போட்டிகளையும் தோற்று தொடரையும் இழந்த இலங்கை கேப்டன் சரித் அசலங்கா தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எடுக்கக்கூடிய நிலையிலும் இருந்தது. ஆனால் கடைசியாக 31 ரன்கள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்த போட்டியிலும் இலங்கை அணிக்கு டாப் ஆர்டர்தான் ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 24 பந்தில் 32 ரன்கள், குஷால் பெரேரா 34 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியின் தரப்பில் கடைசியில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட்டை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 15 பந்தில் 30, சூரியகுமார் யாதவ் 12 பந்தில் 26, ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 9 பந்தில் 22 ரன்கள் எடுக்க, இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.
இந்த தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறும்பொழுது “கடைசிக் கட்ட ஓவர்களில் எங்கள் பேட்டிங்கில் நான் உட்பட லோயர் மிடில் ஆர்டர் எல்லோரும் விளையாடிய விதத்தில் ஏமாற்றம் அடைகிறேன். கடைசிக் கட்ட பேட்டிங்கை நாங்கள் மேம்படுத்த வேண்டும். இந்த ஆடுகளத்தில் பந்து பழையதாக பொழுது பேட்டிங் செய்வது கடினம் ஆகிவிடும்.
இதையும் படிங்க : பசங்க சும்மா அசத்திட்டாங்க.. இதுதான் எங்க பிராண்ட்.. ஆனா இந்த அதிர்ஷ்டமும் இருந்தது – சூரியகுமார் யாதவ் பேச்சு
ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக நீங்கள் இதற்கு அட்ஜஸ்ட் செய்து விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும். நாங்கள் கடைசியில் பேட்டிங் செய்த விதத்தில் 15 முதல் 18 ரன்கள் பின்தங்கி இருந்தோம். எதிர்பாராத விதமாக இன்று வானிலையும் எங்களிடம் விளையாடிவிட்டது. ஈரமான அவுட் ஃபீல்டில் எட்டு ஓவர் போட்டி என்கின்ற பொழுது வெற்றி எளிதானது” என்று கூறியிருக்கிறார்.