இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தென்னாபிக்க அணியின் பேட்டிங் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நெருக்கடி கொடுத்த இந்திய அணி
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சால் தென்னாபிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க ஸ்டெப்ஸ் மற்றும் கோட்சே ஆகியோர் சிறப்பாக விளையாடி தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும் பேட்டிங் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாக அணியின் கேப்டன் மார்க்ரம் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் நாங்கள் முன்னேற வேண்டும்
இதுகுறித்து அவர் கூறும் போது “நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். சில நல்ல திட்டங்களோடு எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பேட்டிங்கை பொருத்தவரை ஆட்டத்தின் இடைப்பகுதியில் பேட்டிங் வரிசை பலன் அளிக்கவில்லை. சில நேரங்களில் நாங்கள் ஒரு பகுதியில் விக்கெட்டுகளை இழக்கும் போது அது அழகாக இருக்காது. நாங்கள் அது குறித்து நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயம் மகிழ்ச்சியை தரவில்லை.
இதையும் படிங்க:எதுவும் முடியல.. இன்னும் 2 மேட்ச் இருக்கு.. அடுத்து பெரிய வேடிக்கையாக இருக்க போகுது – சூரியகுமார் யாதவ் பேட்டி
இனி எங்களது பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டியது அவசியம். ஸ்டப்ஸ் மற்றும் கோட்சே பேட்டிங் செய்த விதம் அற்புதமானதாக இருந்தது. நிச்சயமாக அவர்கள் பேட்டிங் செய்த விதம் பெருமையாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். நம் அணியில் இளம் வீரர்கள் மூத்த வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.