இந்திய அணியில் கேப்டன்களுக்கான வேலை நடக்கிறது – பார்த்திவ் படேல் புதுத்தகவல்!

0
105
Parthiv patel

கடந்த 10 மாதங்களில் விராட் கோலி கேஎல் ராகுல் ரோகித் சர்மா ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரித் பும்ரா ஷிகர் தவான் கேப்டன்களை இந்திய அணி பார்த்துவிட்டது. ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பிறகு வந்ததும் இத்தனை கேப்டன்கள் மாறியிருக்கிறார்கள்.

ஒரு புதிய பயிற்சியாளருக்கு ஒரு அணியில் குறுகிய காலத்தில் இத்தனை கேப்டன்கள் மாறுவது மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. ஒரு திட்டத்தோடு தொடர்ச்சியாய் ஒரே கேப்டன் உடன் பணிபுரியும் போது தான் சிறந்த முடிவுகள் கிடைக்கும். ஆனால் இதையெல்லாம் தாண்டி ராகுல் டிராவிட் தன் பொறுப்பில் திறமையாக செயல்பட்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிய பிறகு இத்தனை கேப்டன்கள் மாறி மாறி வருவதற்கான காரணம் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோகித் சர்மா அடிக்கடி காயம் அடைகிறார் மேலும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இடையில் ஒரு புதிய கேப்டன் வர வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் இப்படியான சூழ்நிலை இந்திய அணிகள் நிலவினாலுமே ஐபிஎல் தொடர் இந்திய அணிக்கு கேப்டனாக வரக்கூடிய அளவிற்கு சில கேப்டன்களை உருவாக்கி தந்திருக்கிறது என்று கூறலாம். ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், கே எல் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கும் கேப்டன்களாக நல்ல முறையிலேயே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தக் காரணங்களால் ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டன் கலா கவரக்கூடிய இடத்தில் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எப்படி கேப்டன் பொறுப்பில் செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் தெரிவிக்கும் போது ” தற்போது ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் கேப்டனுக்குக்கான வேலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அவர்களது கேப்டன்சி மேம்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவோடு சேர்த்து இவர்களும் ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பிற்கு வரும் போட்டியில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஜஸ்பிரித் பும்ரா குஜராத் அணிக்காக எனது கேப்டன்சியின் கீழ் அறிமுகமானார். அவரொரு பேட்ஸ்மேனை வீழ்த்துவதற்காக எப்படி செட் செய்கிறார் என்று நான் அவருடன் களத்தில் நிறைய பேசியிருக்கிறேன். இதன் மூலம் அவருக்கு நிறைய கிரிக்கெட் சம்பந்தமாக அறிவு இருப்பது எனக்கு தெரியும். அவரது கேப்டன்சியின் கீழ் இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்டில் தோற்று இருந்தாலும். எதிர்கால இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வருவதற்கான கிரிக்கெட் அறிவும் தகுதியும் திறமையும் அவருக்கு இருக்கிறது என்று நான் கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.