எதுக்குடா வந்து டீம், கேப்டன் எல்லாரையும் வெறுப்பாக்குறீங்க.. 6 மாசத்துக்கு ஒரு டைம் வந்து, 2 மேட்ச் கூட ஒழுங்கா ஆடாமுடியலைன்னா அப்புறம் எதுக்கு வரணும் – தீபக் சஹரை சாடிய ரவி சாஸ்திரி!

0
430

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடிய தீபக் சகர், 2 போட்டிகளில் விளையாடி மீண்டும் காயமடைந்து சில போட்டிகள் வெளியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் தீபக் சகர், கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு நடத்தப்பட்ட ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக, காயம் ஏற்பட்டு அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு காயத்திலிருந்து குணமடைந்து சர்வதேச போட்டிகளுக்கு கடந்த ஜூலை மாதம் வந்தார். செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பிறகு நேரடியாக கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு வந்துவிட்டார். சர்வதேச போட்டிகளில் இடம்பெற்று விளையாட முடியவில்லை. முதல் இரண்டு லீக் போட்டிகளில் பந்துவீசிய தீபக் சகர், மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஒரு ஓவர் கூட முழுவதுமாக வீசமுடியாமல் காயமடைந்தார்.

இந்நிலையில், 6-7 மாதங்களுக்கு பிறகு காயத்திலிருந்து வருவது, அதன் பிறகு ஓரிரு போட்டிகள் கூட விளையாட முடியாமல் மீண்டும் காயமடைவது, இப்படி இருப்பதற்கு ஏன் வரவேண்டும்? பலரையும் டென்ஷன் ஆக்க வேண்டும்? இதற்கு பெங்களூருவில் அறை எடுத்து மொத்தமாக தங்கிவிடலாம் என்று விமர்சித்திருக்கிறார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில்,

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது காயங்களின் மீது மருத்துவர்களை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் குணமடைந்து விட்டார் என்று கூறினாலும், மீண்டும் மீண்டும் அந்த காயம் ஏற்படதவாறு ஒருமுறை முழுமையாக குணமடைந்துவிட்டு அதன் பிறகு எந்தவித தடங்களும் இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடும் வகையில் அணிக்கு திரும்ப வேண்டும்.

6-7 மாதங்கள் எந்தவித போட்டிகளிலும் விளையாடலாம் சிகிச்சை பெற வேண்டியது. பின்னர் உள்ளே வந்து குறைந்தபட்சம் நான்கு போட்டிகள் கூட விளையாட முடியாமல் மீண்டும் காயமடைந்து பெங்களுருவிற்கு செல்ல வேண்டியது. இது எப்படி குணமடைந்ததாக இருக்கும்? இப்படி செய்வதற்க்கு பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் தனக்கென்று ஒரு அறையை மொத்தமாக ரிசர்வ் செய்துவிட்டு அங்கேயே தங்கி விடலாம்.

முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது செயல்கள் இவை. இப்படிப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதும் ஒரு சில நேரங்களில் தவறு என்று படுகிறது. கேப்டன், அணி நிர்வாகம், பிசிசிஐ என்று பலரும் இதில் இணைந்து வீரர்களின் உடல்நலனுக்கு கவனம் செலுத்தும் பொழுது வீரர்கள் பொறுப்பெற்ற முறையில் இப்படி நடந்து கொள்வதை சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் பல இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கான வாய்ப்புகளும் குன்றி விடுகிறது.” என்றார்.