நேற்று வலைப்பயிற்சில் கிளீன் போல்ட், இன்று அதிவேக அரைசதம் – பேட் கம்மின்ஸ் குறித்து கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் பகிர்ந்து கொள்ளும் ருசிகர தகவல்

0
53
Shreyas Iyer about Pat Cummins fastest fifty

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் நாசூக்கான விதியால், ஏப்ரல் 5 வரை ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்-ல் விளையாட முடியாமல் இருந்தது. அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுடன் ஒப்பந்ததில் இருக்கும் வீரர்கள், ஓய்வு கேட்டால், தரப்படும் ஓய்வு நாட்களில் வேறெந்த அணிக்கும் அவர்கள் விளையாடக் கூடாதென்பதே அந்த விதி!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்-ல் தரும் வண்ணமயமான உணர்வில், அலை நீளமிக்க ஏதோ ஒரு வண்ணம் குறைவதைப் போலத்தான் இருந்தது. ஆனால் நேற்று கொல்கத்தா அணிக்காக, மும்பையை எதிர்த்து களமிறங்கிய, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தக் குறையை ஒரே ஓவரில் ஓட்டிவிட்டார்!

நேற்றைய போட்டியில் மும்பை முதலில் பேட் செய்ய, பந்துவீசிய பாட் கம்மின்ஸ் நான்கு ஓவர்களில் தாராளமாய் 49 ரன்களை வாரி வழங்கி இருந்தார். மும்பை அணியின் கடைசியில் ஓவரில் பொலார்டுக்கு மூன்று சிக்ஸர்களோடு 23 ரன்கள் வேறு. இதனால் அந்த நேரத்தில் உளவியல்ரீதியாக ஆட்டம் மும்பையின் பக்கம் நகர்ந்துதான் இருந்தது!

இரண்டாவது கொல்கத்தா பேட் செய்யும் போது, 15 ஓவர் ஆரம்பிக்கும் வரை ஆட்டம் மும்பையின் கைகளில்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு, ரஸல் மாறுவேடத்தில் வந்ததைப் போல, டேனியன் சாம்ஸின் 16வது ஓவரில் 35 ரன்களை நொறுக்கி எடுத்துவிட்டார். கூடவே ஐ.பி.எல்-ன் அதிவேக அரைசதமான 14 பந்தின் அரைசதமும் வந்ததிருந்தது. ஆட்டநாயகன் விருதும் வந்திருந்தது.

அப்போது பேசிய அவர் “நான் இதனால் அதிக ஆச்சரியமடைகிறேன். நான் எதுக்குறித்தும் பெரிதாய் சிந்திக்க முயற்சி செய்யவில்லை. இது எனக்கு திருப்தியாய் இருக்கிறது” என்றார்.

கேப்டன் ஸ்ரேயாஷ் பேசும் பொழுது “நேற்று வலைப்பயிற்சியில் சந்தித்த பந்துகளில் எல்லாம் போல்டாகி கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கு இப்படி. இதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று சிரித்தபடியே கூறினார்!