ரிஸ்வான் பாபரை தூக்குவேன்.. பாகிஸ்தானுக்காக ஆடி.. இப்ப கனடாவுக்கு ஆடும் வீரர் சவால்

0
490
Kaleem

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் நெருக்கடியில் இருக்கின்றன. இன்று பாகிஸ்தான் அணி கனடா அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் விளையாடுகிறது. அதே சமயத்தில் கனடா அணி இன்று வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கும் ஒரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனடா அணியின் பந்துவீச்சாளர் கலீம் சனா அதிரடியான சவால் விட்டிருக்கிறார்.

இவர் அண்டர் 16 மற்றும் அண்டர் 19 பாகிஸ்தான் அணிகளுக்கு விளையாடியவர். இந்த காலகட்டத்தில் பாபர் அசாம் உடன் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பிறகு அங்கிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்பொழுது கனடா அணிக்காக விளையாடுகிறார்.

- Advertisement -

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கனடா அணி வெற்றி பெற்றால், அந்த அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமையும். மேலும் அமெரிக்கா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடையும் பொழுது, ரன் ரேட் அடிப்படையில் கனடா அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் இன்று தோற்றால் பாகிஸ்தான் அணி வெளியேறிவிடும்.

நடப்பு உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் கனடா அணி டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல்வெற்றியை இந்த முறை பதிவு செய்தது. உகாண்டா அணியும் அப்படியே முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் இன்னும் ஒரு வெற்றி கூட பெறாமல் இருக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து உள்நாட்டில் அந்த அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் கலீம் சனா கூறும் பொழுது ” நான் புதிய பந்தை வீசுகிறேன். எனவே என்னுடைய வெளிப்படையான இலக்கு என்பது பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரது விக்கெட்டையும் கைப்பற்றுவதாகத்தான் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : பாபர்தான் முக்கிய பிரச்சினையே.. நீங்களே இத பாருங்க.. இதுல விராட் கூட போட்டியா? – மிஸ்பா உல் ஹக் விமர்சனம்

நான் பாகிஸ்தானில் என்னுடைய கடைசி முதல் தரப் போட்டியில் விளையாடிய பொழுது அணியில் பாபர் அசாம் இருந்தார். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். அந்த அணிக்காக பாகிஸ்தான் தேசிய அணிக்கு விளையாடுவது கனவாகத்தான் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.