பாபர்தான் முக்கிய பிரச்சினையே.. நீங்களே இத பாருங்க.. இதுல விராட் கூட போட்டியா? – மிஸ்பா உல் ஹக் விமர்சனம்

0
174
Babar

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்து இரண்டாவது சுற்று முன்னேறுவது பெரிய நெருக்கடியான நிலையில்இருக்கிறது. இந்த நிலையில் பாபர் அசாம் பேட்டிங் செயல்பாடு குறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விமர்சித்து பேசி இருக்கிறார்.

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் கேப்டன் பாபர் அசாம் 43 பந்துகள் விளையாடி 44 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரன் வேகத்தை அதிகப்படுத்த வேண்டிய நேரத்தில் சரியாக விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். இது பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில் இலக்கை துரத்திய பொழுது கேப்டன் பாபர் அசாம் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து மீண்டும் விக்கெட்டை இழந்து பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தை அளித்தார்

அவருக்கு பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 வடிவில் நல்ல ஆவரேஜ் இருந்து வருகிறது. ஆனால் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அவருடைய பேட்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கிறது. முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து அவர் பேட்டிங்கில் அணியைக் கைவிட்டு வருகிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் மிஸ்பா உல் ஹக் கூறும்பொழுது ” பாபர் அசாம் நான்காவது உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுகிறார். நெருக்கடியான நிலை வரும் பொழுது அவர் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. இதில் தான் சிறந்தவரா அல்லது விராட் கோலி சிறந்தவரா என்கின்ற போட்டி வரும் பொழுது, இப்படியான முக்கிய போட்டியில் சரியாக விளையாடாமல் போட்டியிட முடியாது. இப்போது நாம் கிட்டத்தட்ட டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி விட்டோம்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கே என்னை நினைச்சு பெருமையா இருக்கு.. நான் மட்டும் அதை பண்ணலனா பிரச்சனையாகி இருக்கும்.. முகமது சிராஜ் பெருமிதம்

அவர் நிறைய செயல் திறன் கொண்ட வீரர். எனவே அணியை முன்னிருந்து வழி நடத்தி வெற்றி பெற வைக்க வேண்டும். ஆனால் அவரால் இதைச் செய்ய முடியவில்லை. 2019ஆம் ஆண்டு முதல் நான்கு உலகக்கோப்பை தொடர்கள் இருந்தன. எதிலுமே அவர் அணியும் முன்னோக்கி அழைத்துச் செல்லவில்லை. இது பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.