137 ரன்.. புது வரலாறு படைத்த கனடா.. பாகிஸ்தானுக்கு நடந்த நல்லது.. அயர்லாந்து அணி மீண்டும் தோல்வி

0
291
T20i wc 2024

நடப்பு 2024 டி20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கனடா அணி வென்று புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கம் போல நியூயார்க் மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. கனடா பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாற்றமாக விளையாடினார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு விக்கெட் வேகமாக சரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கனடா அணிக்கு பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்த நிக்கோலஸ் கிர்டன் ஆறாவதாக வந்த ஸ்ரேயாஸ் மோவ்வா இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடியின் அபார ஆட்டம் காரணமாக கனடா அணி பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 100 ரன்கள் தாண்டியது.

இறுதியாக நிக்கோலஸ் கிர்டன் 35 பந்துகளில் 49 ரன்கள், ஸ்ரேயா மோவ்வா 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக கனடா அணி 20 ஓவர்களில் தாக்குப் பிடித்து விளையாடி ஏழு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் கிரேஜ் யங் மற்றும் மெக்கார்தி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சியை காத்திருந்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக நடையைக் கட்டினார்கள். அந்த அணி 59 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து மார்க் அடைர் 24 பந்தில் 34 ரன், டக்ரல் 23 பந்தில் 33 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் அயர்லாந்து அணி ஏழு விக்கெட்டை இழந்து 125 ரன் மட்டுமே எடுத்தது. 12 ரன் வித்தியாசத்தில் கனடா அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மாவின் வீக்னஸ் இதுதான்.. கண்டிப்பா அவர நான் தூக்குவேன் – முகமது அமீர் சவால்

இந்த போட்டி நடைபெற்ற நியூயார்க் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் 100 ரண்களை தொடாமல் ஆல் அவுட் ஆகின. முதல் முறையாக கனடா அணிதான் 137 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வென்ற முதல் அணி கனடாதான். மேலும் டி20 உலக கோப்பை வரலாற்றில் அந்த அணிக்கு இதுதான் முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி அந்த அணிக்கு பல வகைகளில் வரலாறு அமைந்திருக்கிறது. அயர்லாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பது பாகிஸ்தான் அணிக்கு நல்லதாக அமைந்திருக்கிறது. மேலும் கனடா அணி தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. மேலும் அமெரிக்க அணியை அயர்லாந்தும் இந்தியாவும் நிறுத்தினால் அது பாகிஸ்தான் அணிக்கு இன்னும் கூடுதல் நன்மையாக அமையும்.