“அரையிறுதிக்கு வர முடியுமா?.. நாங்க விட மாட்டோம்.. தொடர்ந்து முயற்சி செய்வோம்!” – கேப்டன் பாபர் அசாம் அதிரடி பேச்சு!

0
620
Babar

இன்று பாகிஸ்தான அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனக்கு இருந்த சிறு அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க பங்களாதேஷ் அணியுடன் விளையாடியது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, இந்த தொடர் முழுக்கவே எவ்வளவு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறதோ அதையே இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாடாமல் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மகமதுல்லா மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்தமுறை பாகிஸ்தான் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற பகார் ஜமான் அதிரடியாக 81 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதம் எடுத்து ஆட்டம் இழந்தார். 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

நியூசிலாந்து அணி எஞ்சி இருக்கும் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை பெரிய அளவில் தோற்று, பாகிஸ்தான் அணி தனது இரண்டு ஆட்டங்களை சராசரியான அளவில் வென்றால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “மூன்று துறைகளிலும் எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்திற்கு அவர்களுக்குத்தான் முழு கிரெடிட்டும். பகார் ஜமான் அவர் வழியில் விளையாடும் பொழுது எப்படி சிறப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். அவர் செய்வதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

நாங்கள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்று, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்க்க விரும்புகிறோம். இந்த வெற்றி எங்களுக்கு அடுத்து வரும் ஆட்டங்களில் நல்ல நம்பிக்கையை கொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

புதிய பந்தில் ஷாகின் அப்ரிடி நன்றாகத் துவங்கினார். 15 – 20 ஓவர்கள் கழித்து பங்களாதேஷ் அணி ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்கியது. ஆனால் எங்களுடைய முன்னணி பந்துவீச்சாளர்கள் அதை உடைத்தார்கள்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் அடித்து விக்கெட் எடுத்தார்கள். என்னையும் என் அணியையும் ஆதரித்த ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!