முழிபிதுங்கும் இந்திய பவுலர்கள்.. ரன் வேட்டையை நிறுத்தாமல் தொடரும் உஸ்மான் கவாஜா-கேமரூன் கிரீன் ஜோடி.. சாதனை பார்ட்னர்ஷிப்! – 350+ ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!

0
145

இரண்டாம் நாள் ஆட்டத்திலும் தொடர்கிறது உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் ஜோடியின் ரன் வேட்டை. உணவு இடைவேளையின்போது, அதே நான்கு விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்து இருக்கின்றனர் ஆஸ்திரேலியா அணியினர்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 255 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா சதம் விளாசி 104 ரன்களுடனும், கடைசி ஷெசனில் இவருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி முதல் ஒரு மணி நேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்திய போதும் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் ட்ரிங்க்ஸ் பிரேக் முடிந்து மீண்டும் வந்தபோது, இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து ரோகித் சர்மா தாக்குதல் நடத்தினார். இதுவும் எடுபடவில்லை. தொடர்ந்து கவாஜா கிரீன் ஜோடி ரன்குவித்து வருவதை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உஸ்மான் கவஜா 150 ரன்களை எட்டினார். இவருக்கு பக்கபலமாக இருந்து வந்த கேமரூன் கிரீன் இன்னும் அதிரடியுடன் விளையாட ஆரம்பித்தார். உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா அணி 347 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. உஸ்மான் கவாஜா 150 ரன்களுக்கும், கேமரூன் கிரீன் 95 ரன்களுக்கும் களத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

- Advertisement -

உணவு இடைவேளை முடிந்து வந்த கேமரூன் கிரீன், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். ஆஸி., அணி 350 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.