கேமரூன் கிரீனை இப்படித்தான் தூக்கினேன்! – திட்டம் பற்றி அஷ்வின் பேச்சு

0
139
Ashwin

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது!

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து உஸ்மான் கவாஜா சதத்துடன் 255 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இரண்டாவது நாளில் மேற்கொண்டு கவஜா மற்றும் கேமரூன் கிரீன் மிகச் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு ரன்களை கொண்டு வந்தார்கள். கவாஜாவுக்கு அடுத்து கேமரூன் கிரீனும் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

மேற்கொண்டு ரன் வேட்டையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட எத்தனிக்கையில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் மிக சிறப்பான முட்டுக்கட்டையை போட்டு ஆஸ்திரேலியா ரன் வேகத்தை தடுத்தார். குறிப்பாக சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீனுக்கு லெக் ஸ்டெம்புக்கு வெளியே ஒரு பந்தை வீசி, அதை அவர் அடிக்க முயல, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழக்க வைத்தார்.

தற்பொழுது இந்த விக்கெட் குறித்து பேசிய அஷ்வின் ” கேமரூன் கிரீன் பலமானவர். நாம் அவரது பலத்திலிருந்து தள்ளி இருக்க விரும்புகிறோம். நான் அவருக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் சிட்னியில் விளையாடியிருக்கிறேன். அதைத்தொடர்ந்து நான் அவரது பேட்டிங்கை பார்த்து வருகிறேன். அவர் ஆப்சைட் வெளியே வீசப்படும் பந்துகளுக்கு சிறப்பாக நகர்கிறார். நன்றாக இறங்கி வந்து விளையாடுகிறார். இதையெல்லாம் கவனித்து அவரால் சரியாக விளையாட முடியாத படி செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம்” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் அவருக்கு பந்து வீசும் பொழுது, அவர் எப்பொழுதும் பந்தின் லைனுக்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்தேன். அவர் அப்படி விளையாடுவதற்கு ஆடுகளமும் அவருக்கு நன்றாக ஒத்துழைத்தது. நான் இதனால் அவர் அப்படி விளையாட முடியாதவாறு செய்யும்படி வீச வேண்டும் என்று முடிவு செய்தேன். மேலும் அவரது தலை ஷாட் விளையாடும் போது அடிக்கடி கீழே விழுந்து கொண்டு இருந்தது!” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆகையால் இதுதான் திட்டம். ஆனால் இந்த முறையில் கட்டாயம் விக்கெட் எடுக்க முடியும் என்பது கிடையாது. இந்த விக்கெட்டில் என் வழியில் மற்ற விஷயங்களும் சென்றன. என் கையில் இருந்து பந்து சென்ற விதத்தில் நான் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். என் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததற்கு நான் மகிழ்ச்சியாக உறங்க செல்வேன்!” என்று கூறியிருக்கிறார்!