நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு மினி ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் பேட்டிங் செய்ய வந்தபோது நூர் அகமத் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் கடுப்பு
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேமரூன் கிரீன் குறிப்பிட்ட காலத்திற்கு ஐபிஎல் தொடரில் பந்து வீசக்கூடாது எனும் கட்டளையோடு அனுப்பி வைத்தது. இதுவும் ஆரம்பப் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு பெரிய சிக்கல்களை உருவாக்கியது.
நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா அணி 25.50 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் வாங்கியது. இதன் அடிப்படையில் கொல்கத்தா இவருக்கு ஒரு போட்டிக்கு 1.80 கோடி ரூபாய் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திலக் வர்மா சம்பளம்
தற்போது ஐந்து போட்டிகளில் எட்டு கோடி ரூபாய்க்கு மேலாக இவரது பணம் வீணாகியுள்ளது. இது ஐபிஎல் தொடரில் திலக் வர்மா வாங்கும் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முகேஷ் குமார் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியவரது சம்பளமும் இவ்வளவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : என் பவுலிங் பிளான் இதுதான்.. விரல்களை ரொம்ப பத்திரமா வச்சிக்கிட்டேன்.. அடுத்து ஒரு விஷயம் செஞ்சேன் – நூர் அகமது பேட்டி
இந்த ஐபிஎல் தொடரில் அபிஷேக் நாயர் பயிற்சியின் கீழும் ரகானே கேப்டன்சி கீழும் கொல்கத்தா மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. எதிர்பார்த்து வாங்கப்பட்ட வீரரான கேமரூன் கிரீனும் மோசமாக விளையாடுகிறார். இதனால் அந்த அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது.






