ஐபிஎல் 2025: பிளே ஆஃப் ஆடாமல் கிளம்பும் 7 வெளிநாட்டு வீரர்கள்.. மும்பை ஆர்சிபி அணிகளுக்கு சிக்கல்

0
1080

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. ஏற்கனவே பஞ்சாப் அணி டாப் 2 இடங்களில் ஒன்றை உறுதி செய்துள்ள நிலையில், மும்பை அணி 4வது இடத்தை உறுதி செய்திருக்கிறது. இன்று நடந்து ஆர்சிபி – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின் ஆர்சிபி மற்றும் குஜராத் அணி எந்த சுற்றில் விளையாடும் என்பதை உறுதி செய்ய முடியும்.

இந்த சூழலில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக 4 அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்கள் குறித்து தெரிய வந்துள்ளது. பஞ்சாப், குஜராத், ஆர்சிபி மற்றும் மும்பை ஆகிய 4 அணிகளில் இருந்தும் மொத்தமாக 7 வீரர்கள் வெளியேற உள்ளனர். அந்த வகையில் முதலில் ஆர்சிபி அணியில் இருந்து ஜேக்கப் பெத்தல் வெளியேற உள்ளார்.

- Advertisement -

பட்லர் எஸ்கேப்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஜேக்கப் பெத்தல் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் தேசிய அணிக்காக விளையாட புறப்படும் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணி டிம் செய்ஃபெர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் குஜராத் அணியில் இருந்து பட்லர் தேசிய அணிக்காக விளையாட புறப்பட்டுள்ளார். இவரது இடத்தில் குசால் மெண்டிஸ் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல் மும்பை அணிக்காக ஆடி வந்த அதிரடி ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் புறப்பட உள்ள நிலையில், அவரது இடத்தில் ஜானி பேட்ஸ்டோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளரான இங்கிடி சொந்த ஊர் செல்லவுள்ள நிலையில், அவரது இடத்தில் விளையாட ஜிம்பாப்வே அணியின் முசாராபாணி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியில் 3 வீரர்கள்

அதேபோல் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி வந்த ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பஞ்சாப் அணி ஏற்கனவே கைல் ஜேமிசனை ஒப்பந்தம் செய்து, நேற்றைய ஆட்டத்திலேயே ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு அளித்திருக்கிறது.

இன்னொரு பக்கம் மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன் மற்றும் காப்ரைன் பாஸ்ச் ஆகிய இருவரும் தென்னாப்பிரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர்களின் இடத்தில் ரிச்சர்ட் கிளீசன் மற்றும் இலங்கை அணியின் அசலங்கா ஆகிய இருவரும் மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மும்பை அணி அதிக பாதிப்புகளை சந்தித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -