இந்திய கிரிக்கெட்

பும்ரா பிராட்மேனையும் விட்டு வைத்திருக்க மாட்டார்.. ரன் ஆவரேஜை சரித்து விட்டிருப்பார் – கில்கிறிஸ்ட் பாராட்டு

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பிராட்மேன் காலத்தில் விளையாடி இருந்தால் அவரையும் பெரிய அளவில் தனது சிறப்பான பந்து வைத்தால் தொந்தரவு செய்திருப்பார் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய காலகட்ட கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் தலைசிறந்த ஒரே வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியின் பும்ரா மட்டுமே இருந்து வருகிறார். மற்ற சில பந்துவீச்சாளர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டுமே சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் பெரிய பங்களிப்புகள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பும்ராவின் பந்துவீச்சு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. மேலும் அவர் வீசும் ஒவ்வொரு பந்தையும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகவும் பயத்தோடு பார்க்கும் அளவுக்கு அவரது செயல்பாடு அமைந்திருந்தது.

மேலும் ஆஸ்திரேலிய எதிரான இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு எதிரானது கிடையாது பும்ராவுக்கு எதிரானது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பாராட்டும் அளவுக்கு தனி ஒரு வீரராக பும்ரா ஆதிக்கம் செலுத்தினார். மேலும் இந்த தொடரில் அவரே அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வந்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். துரதிஷ்டவசமாக இந்திய அணியில் மற்றவர்கள் செயல்பாடு சிறப்பாக அமையாததால் இந்திய அணி தொடரை இழந்தது.

- Advertisement -

பிராட்மேனையும் விட்டு வைத்திருக்க மாட்டார்

இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மறைந்த பிராட்மேன் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் தங்கள் நாட்டு கிரிக்கெட்டின் கௌரவ அடையாளமான பிராட்மேனையும் பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சால் தொந்தரவு செய்திருப்பார் என்றும், பிராட்மேன் பேட்டிங் சராசரி சரிந்திருக்கும் என்றும் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : 18வது சீசன் 17வது கேப்டன்.. ஐபிஎல்லில் ஸ்ரேயாஸ் செஞ்ச அந்த சாதனையை யாரும் செய்யல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “நான் பும்ராவை மதிப்பிடவில்லை. தற்போது உலக கிரிக்கெட்டில் அவருக்கு தருவதற்கு நம்பர் எதுவும் கிடையாது. பிராட் மேன் உச்சத்தில் இருந்த காலத்தில், உம்ரா பந்துவீசி இருந்தால் பிராட்மேனை தொந்தரவு செய்து இருப்பார். பிராட்மேனின் பேட்டிங் சராசரி 99 என்று இருந்திருக்காது. அவர் அதை இன்னும் குறைத்து இருப்பார்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts