ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 18 சீசனுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு முக்கிய சாதனையை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா இடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஏலத்தை எதிர்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி ஆச்சரியப்படுத்தியது. பலரும் பஞ்சாப் ரிஷப் பண்ட்டை வாங்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் செய்த விஷயம் தெரிந்ததுதான்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்பொழுது ” தற்பொழுது ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் 17வது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். நியாயமாக இது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 25 கோடி ரூபாயை தாண்டி சென்ற பொழுது, அவரை அவர்கள் கேப்டன் ஆக்குவதற்குதான் இவ்வளவு பணம் செலவு செய்து வாங்குகிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததாகவே இருந்தது”
“இது மட்டும் இல்லாமல் ஏலத்தில் டெல்லி ஸ்ரேயாஸ் ஐயருக்கு நீண்ட தூரம் சென்றது. காரணம் அவர்கள் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கி கேப்டனாக முடிவு செய்திருந்தார்கள். எனவே அவர்கள் அவரை கொல்கத்தா அணியில் இருந்து தைரியமாக வெளியேறி வரச் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏலத்தில் கொஞ்ச நேரம் கழித்துதான் தமக்கு கேப்டன் கிடைக்கவில்லை என்பது புரிந்தது”
பஞ்சாப் கிங்சில் நடக்கும் குழப்பம் இதுதான்
“ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக வழிநடத்தும் சாதனையை பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே செய்யவிருக்கிறார். அவர் இதுவரையில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வழிநடத்தி இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்துவதின் மூலம் அவர் இந்த சாதனையை ஒரு இந்தியராக செய்யப் போகிறார்”
இதையும் படிங்க : அஸ்வின் ஓய்வு பெற்ற உடனே.. அவர் இந்த வேலையை செய்யறது பெரிய விஷயம் – மைக்கேல் வாகன் பாராட்டு
“பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இதுவரை 18 சீசன்களில் 17 கேப்டன்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் கேப்டன்கள் தாமாக வெளியேறி செல்கிறார்கள். இல்லை அணி நிர்வாகம் அவர்களை நீக்குகிறது. இல்லையென்றால் பயிற்சியாளர்கள் கேப்டன்களை நீக்குகிறார்கள். இப்படித்தான் தொடர்ந்து அந்த அணி நிர்வாகத்தில் நடைபெற்று வருகிறது. இனிமேலாவது அப்படி ஏதும் நடைபெறாமல் இருக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.






