“பும்ரா மூளையை யூஸ் பண்ணுங்க.. ஒரே நாள்ல ஹீரோவாக முயற்சி பண்ண வேண்டாம்” – வெளிப்படையாக அட்வைஸ் வைத்த நிடினி!

0
846
Bumrah

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா தனது பிரதான அஸ்திரமான ஜஸ்பிரித்
பும்ரா இல்லாமல் கேப்டன்சி செய்வதில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தார் என்று கூறலாம்.

பும்ரா அணியில் இடம்பெறாதது அந்த அளவிற்கு மோசமான தாக்கத்தை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அவர் அந்த அளவிற்கு போட்டிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தனி ஒரு வீரராக இருந்தார். கேப்டன் ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியில் பந்தை கையில் தந்தாலும், அங்கிருந்து ஒரு திருப்புமுனையை உருவாக்கக்கூடிய திறமை பும்ராவுக்கு இருக்கிறது!

- Advertisement -

அவருக்கு உண்டான காயம் என்பது கொஞ்சம் விசித்திரமானது. பந்து வீசும் போது முதுகுப் பகுதியில் தந்த அதிக அழுத்தத்தின் காரணமாக, முதுகுப் பகுதியில் வலி உருவாகியிருந்தது. அதற்கு ஓய்வுதான் மருந்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது.

இந்த நிலையில் எவ்வளவு ஓய்வு எடுத்துப் போட்டிக்கு திரும்பி வந்தாலும் அந்த வலி அவரை விட்டுப் போகவே இல்லை. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை நியூசிலாந்து அனுப்பி சிறப்பு அறுவை சிகிச்சை செய்தது. இதற்குப் பின்புதான் பும்ரா காயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தார்.

பும்ரா உடல் தகுதியை எட்ட, அவர் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு திரும்பியதோடு கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். கேப்டனாக அந்தத் தொடரை வென்றதோடு முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் தொடர் நாயகன் இவதையும் வென்று அசத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் பும்ரா குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மஹாய நிடினி “ஜஸ்ப்ரீத் பும்ரா அனைவரும் பார்க்க விரும்பும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது காயத்தில் இருந்து திரும்ப வந்திருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் மூளையை, அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரே நாளில் கதாநாயகன் ஆவதற்கான முயற்சிகள் செய்யக்கூடாது. இதனால் மீண்டும் காயத்திற்கு திரும்ப செல்ல வேண்டியது வரலாம். எங்களுக்கு தெரிந்த சூப்பர் ஃபிட் மனிதராக உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது திடீரென்று இளம் வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை இந்தியா மிக முக்கிய நாடாக மாறிவிட்டது. இதற்கு முன்பு இந்தியா இப்படி இருந்தது கிடையாது. ஆனால் இப்போது இந்தியா வேகப்பந்துவீச்சுத் துறையில் சிறந்த நாடாக உருவாகி வருகிறது!” என்று கூறியிருக்கிறார்!