இந்திய கிரிக்கெட்

ஐசிசி ரேங்க்.. அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா.. உச்ச இடத்தில் ஆதிக்கம்.. வெளியான புதிய பட்டியல்

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவுக்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ரேங்க் பட்டியலில் பும்ரா முதல் இடத்தை பிடித்ததோடு அஸ்வினின் மெகா சாதனையை சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரராக பும்ரா இருந்து வருகிறார். மேலும் இதன் காரணமாக ஐசிசி பந்துவீச்சாளர் ரேங்க் பட்டியலில் உச்ச நிலையை எட்டி இருக்கிறார்.

மூன்று போட்டிகள் 21 விக்கெட்டுகள்

இந்தத் தொடரில் பும்ரா மூன்று போட்டிகள் விளையாடி மொத்தம் 21 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ரேங்க் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா மொத்தமாக ஒன்பது விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அவருக்கு மொத்தம் 14 புள்ளிகள் கிடைத்தது. இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மெகா சாதனை ஒன்றையும் சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

அஸ்வினின் மெகா சாதனை சமன்

ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் மொத்தம் 904 புள்ளிகள் எடுத்திருந்தார். இது ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஐசிசி தரவரிசை பட்டியலில் எடுத்த அதிக புள்ளிகளாகச் சாதனையாக இருந்தது. தற்போது பும்ரா இதே 904 புள்ளிகள் எடுத்து இன்று சாதனையை சமன் செய்திருக்கிறார்.

மேலும் இந்த பட்டியலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 789 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா நான்கு இடங்கள் சரிந்து 755 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தில் தொடர்கிறார். மொத்தம் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார்.

இதையும் படிங்க :

ஜஸ்பிரிட் பும்ரா – 904
ககிசோ ரபாடா – 856
ஜோஷ் ஹேஸ்ல்வுட் – 852
பாட் கம்மின்ஸ் – 822
ரவிச்சந்திரன் அஷ்வின் – 789
மாட் ஹென்றி – 782
நாதன் லியோன் – 770
பிரபாத் ஜெயசூர்யா – 768
நோமன் அலி -759
ரவீந்திர ஜடேஜா – 755

- Advertisement -
Published by