இங்கி பண்ற வேலைய வெளியே சொல்லி.. பைன் கட்ட விரும்பல.. என்னவோ செய்யட்டும் – பும்ரா வருத்தம்

0
326
Bumrah

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பயன்படுத்தப்படும் பந்துகள் குறித்து பும்ரா அதிருப்தி தெரிவித்திருக்கிறார். மேலும் கவாஸ்கர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் போன்றவர்களும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

நேற்று இந்திய அணி இரண்டாவது புதிய பந்தில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் அந்த பந்து சேதம் அடைந்தது. மேலும் தற்போதைய சுற்றுப்பயணத்தில் டியூக்ஸ் பந்துகள் அடிக்கடி சேதம் அடைந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய கேப்டன் கில் ஒவ்வொரு போட்டியிலும் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் டியூக்ஸ் பந்துகள் வெகு சீக்கிரத்தில் பளபளப்பையும் தரத்தையும் இழந்து விடுவதை பார்க்க முடிகிறது என இங்கிலாந்து முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியிருந்தார். அந்த அளவிற்கு பந்தின் தரம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

மேலும் 10 ஓவர் மட்டுமே வீசப்பட்டு சேதம் அடைந்த பந்துக்கு பதிலாக தரப்பட்ட பந்து மிகவும் பழையதாக இருந்தது. இப்படி ஏதாவது இந்தியாவில் வைத்து நடந்திருந்தால் இந்நேரத்திற்கு பிரிட்டிஷ் ஊடகங்கள் இதை பெரிய பிரச்சினையாக மாற்றி இருக்கும் எனவும், தற்போது எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

அபராதம் கட்ட விரும்பவில்லை

இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “நாங்கள் மிகவும் உழைத்து கஷ்டப்பட்டு அதிக ஓவர்கள் பந்து வீசிக் கொண்டிருக்கிறோம். எனவே இப்படியான சூழலில் நான் ஏதாவது கூறி அபராதம் கட்ட விரும்பவில்லை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பந்தை வைத்து நாங்கள் வீசினோம். சில நேரங்களில் நாம் வழியில் விஷயங்கள் செல்லும் சில நேரங்களில் செல்லாது. சில நேரங்களில் நாம் மோசமான பந்தில் பந்து வீச வேண்டியது இருக்கும்”

இதையும் படிங்க : கில் தேவையில்லாம பிரச்சனை பண்றாரு.. திறமை இருந்தா போய் இதை செய்ங்க – ஜோ ரூட் கோபம்

“ஆனால் கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இருந்தது போல் இல்லாமல் பந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெப்பமான வறண்ட சூழ்நிலையில் நாங்கள் இங்கிலாந்தில் விளையாடுகிறோம். இதன் காரணமாக இங்கு ஆடுகளங்கள் மிகவும் வறட்சியாக இருக்கிறது. இதனாலும் பந்து எளிதில் தேய்ந்து போகும் வாய்ப்புகள்” உள்ளது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -