நான் 6 மாசம்தான் ஆடுவேனு அவங்க சொன்னாங்க.. இத கடவுள் கிட்டயே விட்டுட்டேன் – பும்ரா உருக்கமான பேச்சு

0
108
Bumrah

சர்வதேச கிரிக்கெட்டை தன்னால் விளையாட முடியாது என்று மக்கள் பேசியதாகவும், பிறகு ஆறு மாதம் மட்டுமே விளையாட முடியும் என்று கூறியதாகவும் ஆனால் தற்போது எல்லாம் மாறி இருப்பதாகவும் பும்ரா கூறி இருக்கிறார்.

பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் காரணமாக அவர் மிக வேகமாக காயம் அடைய கூடும் எனவும் இதனால் அவரால் சர்வதேச கிரிக்கெட் நீண்ட காலம் விளையாட முடியாது எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் ஆரம்ப காலத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள். காயங்கள் வந்தபோதிலும் பும்ரா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 10 வருடங்களை தாண்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னை எழுதினால் லாபம்

இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “மக்கள் என்னை குறித்து என்ன எழுதுகிறார்கள் என்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னை பற்றி என்ன எழுத வேண்டும் எழுதக் கூடாது என மக்களுக்கு கற்பிக்க நான் முயற்சி செய்யவில்லை. நமது நாட்டில் கிரிக்கெட் பிரபலமானது என்பதையும், ஒவ்வொருவருக்கும் தான் விரும்புவதை எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்”

“மேலும் என் பெயரை தலைப்பாக வைத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் இறுதியில் இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. இதை நான் தலையில் ஏற்றுக் கொண்டால் நான் இதை நம்பத் தொடங்கி விடுவேன். நான் எப்படி விளையாட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும், வெளியில் இருக்கக்கூடிய ஆட்கள் கிடையாது”

- Advertisement -

ஆறு மாதத்தில் முடிந்து விடும் என்றார்கள்

” நான் இந்தியாவுக்காக எனது நம்பிக்கையின் அடிப்படையில் விளையாட விரும்பினேன். ஆனால் என்னால் விளையாட முடியாது என ஆரம்பத்தில் சொன்னார்கள். பிறகு அது ஆறு மாதம், எட்டு மாதம் மட்டுமே விளையாட முடியும் என்று சொன்னார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இதை நான் 10 வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான் 12, 13 வருடங்கள் விளையாடி விட்டேன்”

இதையும் படிங்க : ஸ்டோக்சை இழுத்து ஆட வச்சி அவுட் செய்த ரிஷப் பண்ட்.. ஒரு வார்த்தைக்கு ஒரு விக்கெட்.. கெத்து சம்பவம்

“இப்போதும் கூட என் காயம் பற்றி பேசுகிறார்கள். நான் இதையெல்லாம் கண்டு கொள்வது கிடையாது. நான் என் வேலையை செய்கிறேன். ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒவ்வொரு விதமான தலைப்புகள் செய்திகளாக வரும். என்னை முடிந்தவரை தயார் செய்து என்னால் முடிந்த வரை விளையாடுவேன். மீதியை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடுகிறேன். கடவுள் எனக்கு கொடுத்த அதிர்ஷ்டம் எதுவாக இருந்தாலும் அதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அதேபோல இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -