ஸ்டோக்சை இழுத்து ஆட வச்சி அவுட் செய்த ரிஷப் பண்ட்.. ஒரு வார்த்தைக்கு ஒரு விக்கெட்.. கெத்து சம்பவம்

0
267
Rishabh

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட் செய்யும் மைண்ட் கேம் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதுகுறித்து நான்காவது முறையாக ஸ்டெம்ப் மைக்கில் பதிவான விஷயம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுக்க, தற்போது போட்டி முடிவை நோக்கி பயணிக்கும் சூழ்நிலைக்கு வந்திருப்பதால் பரபரப்பு கூடியிருக்கிறது.

- Advertisement -

சச்சின் வெளிப்படுத்திய விஷயம்

இந்திய அணி முதல் நாளில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுதே சோயப் பஷீர் பந்துவீச்சின் போது இந்திய கேப்டன் வில் மற்றும் இந்திய துணை கேப்டன் ரிஷப்மென்ட் இருவரும் ஹிந்தியில் மிக சத்தமாக பேசிக் கொண்டதாகவும், இது வேண்டுமென்றே பவுலர் மீது செய்யப்பட்ட மைண்ட் கேம் எனவும் சச்சின் கூறி இருந்தார்.

ஏனென்றால் சோயப் பஷீர் பாகிஸ்தான் வம்சாவளி என்பதால் அவருக்கு ஹிந்தி தெரியும். எனவே அவருக்கு மட்டும் தெரியும் வகையில் ஹிந்தியில் மிகச் சத்தமாக பேசி ரிஷப் பண்ட் மைன் கேம் விளையாடினார். இதை போட்டியின் போது கவனித்த சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

மீண்டும் மைன்ட் கேம்

இந்த நிலையில் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ரவீந்திர ஜடேஜா கொஞ்சம் வெளியில் வீசிய பந்தை அவர் மிகவும் உன்னிப்பாக கவனித்து அடிக்காமல் கீப்பரிடம் விட்டார். இப்படி பந்தை அடிக்காமல் விட்டதை நக்கல் அடிக்கும் விதமாக ரிஷப் பண்ட் “சென்சிபிள் ஸ்டோக்சி” என கமெண்ட் அடித்தது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருக்கிறது.

இதையும் படிங்க : கம்பீர் கில் இப்படி பண்ணி இருக்க கூடாது.. அவர் ஸ்வெட்டரை கழட்டிய பின்பு இப்படி செய்யலாமா? – தினேஷ் கார்த்திக் கேள்வி

ரிஷப் பண்டின் இந்த நக்கலான வார்த்தை ஸ்டோக்ஸ் மனதில் விளையாடிவிட்டது. இதைத்தொடர்ந்து சிராஜ் இதே போல வீசிய பந்தை அவர் ஸ்கொயரில் அடிக்க முயற்சி செய்து பந்து பெரிய எட்ஜ் எடுத்து ரிஷப் பண்ட் இடம் செல்ல, ஸ்டோக்ஸ் பரிதாபமாக ஆட்டம் இழந்து விட்டார். ஒரே ஒரு வார்த்தையை வைத்து ரிஷப் பண்ட் ஒரு விக்கெட்டை வாங்கி விட்டார் என சமூக வலைதளத்தில் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -