இந்திய கிரிக்கெட்

ஆரம்ப 2 ஓவர்.. கான்ஸ்டாஸை ஆறு ஏழு முறை அவுட்டாக்க முடியும்னு நினைச்சேன் – பும்ரா ஓபன் பேட்டி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப 2 ஓவர்களில் சாம் கான்ஸ்டாஸை ஆறு அல்லது ஏழு முறை அவுட் ஆக்க முடியும் என தான் நினைத்ததாக பும்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும் இந்த போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவரது ஆட்டம் ஆஸ்திரேலியா அணி நல்ல ஸ்கோருக்கு செல்வதற்கு நம்பிக்கையையும் கொடுத்தது. தற்போது இந்த 19 வயது வீரர் திடீர் கதாநாயகனாக ஆஸ்திரேலியர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறார்.

ஆறு அல்லது ஏழு முறை அவுட் ஆக்கியிருப்பேன்

இதுகுறித்து பும்ரா கூறும் பொழுது “நான் இந்த சூழ்நிலையை அனுபவித்தேன். நான் நிறைய டி20 கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சுவாரசியமான பேட்ஸ்மேன்கள் இருப்பது ஓகே, ஆனால் நான் போட்டியில் இருப்பதை உணர்ந்தேன். ஒரு விக்கெட்டுக்கு தூரத்தில் நான் இருந்ததாக நினைக்கவில்லை”

“ஆரம்பத்தில் முதல் இரண்டு ஓவர்களில் கான்ஸ்டாஸை ஆறு அல்லது ஏழு முறை அவுட் ஆக்கி விட முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் கிரிக்கெட் இப்படித்தான் இருக்கிறது அது சில நேரங்களில் பலன். தரும் சில நேரங்களில் பலன் தராது. பிறகு பாராட்டிய நபரையே விமர்சிக்கவும் செய்வார்கள். எப்போதும் நான் கிரிக்கெட்டில் புதிய சவால்களை விரும்புகிறேன். இது ஒரு புதிய சவாலாக இருந்தது”

- Advertisement -

ஸ்மித் எப்போதும் சவால் ஆனவர்

“ஸ்மித் எப்பொழுதும் சவால் தரக்கூடியவராக இருந்திருக்கிறார். அவர் வழக்கத்திற்கு மாறானவர். பந்துவீச்சில் என்னை போல அவர் பேட்டிங்கில் விளையாட கூடியவர். அவருக்கான நாள் அமையும் பொழுது அவர் கலக்குகிறார். சில நாட்களில் அது அமைவதில்லை. வெளிப்படையாக பல பகுதிகளில் நேற்று கோல் அடித்தார். அவருக்கு எதிராக நீங்கள் சீராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் நல்ல பந்தாக வீச வேண்டும்”

இதையும் படிங்க : அறிவே இல்லையா.. இப்படியா விளையாடுவ..உனக்கு கம்மின்ஸ் செஞ்சத பார் – பண்டை விமர்சித்த கவாஸ்கர்

“இது எப்போதும் சவாலாக இருந்தது நான் அவருக்கு எதிராக நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறேன். நீண்ட காலமாக அவருக்கு எதிராக விளையாடி வருகிறேன். அவர் இந்த விளையாட்டில் சிறந்தவர்களில் ஒருவர். இந்த வடிவத்தில் அவருக்கு பந்து வீசுவது கடினம். அவர் சிறந்த ஒரு இன்னிங்ஸை விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts