இந்திய கிரிக்கெட்

எங்க டீம்ல இவர்தான் பெராரி கார் மாதிரி.. நாங்க உலக கோப்பைக்கு இந்த ஸ்பெஷல் பிளான வச்சிருக்கோம் – மோர்னே மோர்கல் பேட்டி

தற்போது தங்கள் அணியில் உள்ள ஒரு வீரர் ஃபெராரி கார் போல் மிகவும் முக்கியமானவர் என்றும், மேலும் டி20 உலக கோப்பைக்கு எப்படியான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் இந்திய பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நான்காவது டி20 போட்டியில் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் கலந்து கொண்டார்.

இவர் பெராரி போன்றவர்

இதில் டி20 உலக கோப்பைக்கு பந்துவீச்சு திட்டங்கள் குறித்து பேசிய இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோரனே மோர்கல் கூறும்பொழுது “நாங்கள் எந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோமோ அதற்கு தகுந்த மாதிரி தான் நாங்கள் எங்களுடைய பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்து போட்டிக்கான தொனியை அமைப்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டவன்”

“பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளர். அவர் மிக உயர்ந்த திறமை கொண்டவர். அவர் மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த மாதிரியான சுமை சில நேரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனக்கு முக்கியம் என்னவென்றால் அவர் எவ்வளவு வசதியாக இருக்கிறார்? எங்களுடைய திட்டங்கள் குறித்து அவர் நிம்மதியாக இருக்கிறாரா? என்று பேசி தெரிந்து கொள்வதுதான்”

- Advertisement -

எங்கள் திட்டம் இதுதான்

“எங்களிடம் எந்த சூழ்நிலையிலும் பந்து வீசக்கூடிய சில பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் சில காலத்திற்கு முன்பாகவே எங்களுக்கு எதிராக எதிர் அணிகள் ஒரே மாதிரியான திட்டத்தை வகுக்க முடியாத அளவுக்கு, பல்வேறான காம்பினேஷன்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தோம்”

இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவுக்கு பலவீனமே இல்ல.. அவரை எங்களால கட்டுப்படுத்த முடியல – நியூசி கோச் ஓரம் பேட்டி

“இப்போது ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொண்டால் அவரால் புதிய பந்திலும் மேலும் கடைசியிலும் வந்து வீச முடியும். தற்போது அவர் உடல் பகுதியில் மிகவும் சிறப்பாக இருக்கிறார். எனவே அவருக்கு நல்ல பவுன்ஸ் பந்தில் கிடைக்க செய்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by