தன்னுடைய பந்துவீச்சில் நான்கு கேச் வாய்ப்புகளை தவறவிட்டது குறித்து பூம்ரா மனம் திறந்து பேசி இருக்கிறார். குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டுமே மூன்று கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். மேலும் ரவீந்திர ஜடேஜா ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்திய பீல்டிங் மகா மோசமாக இருந்த சூழ்நிலையிலும் பும்ரா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் கைப்பற்றினார். மேலும் அவருடைய பந்துவீச்சு சிக்கனமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இது இங்கிலாந்தில் மூன்றாவது ஐந்தாவது விக்கெட்டாக பதிவானது.
கோட்டை விட்ட இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ஒல்லி போப், ஹாரி புரூக் மற்றும் பென் டக்கேட் மூன்று பேட்ஸ்மன்களுக்குமே பும்ரா பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு மிக நெருக்கமாக ஸ்கோர் எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் ஆரம்ப கேட்ச் வாய்ப்புகளை பெரிதாக கண்டுகொள்ளாத பும்ராவே இறுதியாக ஹாரி குரூப் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்ட பொழுது கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். அந்த அளவிற்கு போட்டியை கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு இங்கிலாந்து பக்கமாக மாற்றி விட்டார்கள்.
உட்கார்ந்து அழ முடியாது
இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “இதற்காக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க முடியாது. இதை விட்டுவிட்டு நகர்ந்து ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இதை தலையில் வைத்துக்கொண்டு இருக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் அணியில் இவர்கள் எல்லோருமே இளையவர்கள். சில நேரங்களில் பந்தை பார்ப்பது கடினமாக இருக்கும். யாருமே வேண்டுமென்று கேட்ச் வாய்ப்பை தவற விடுவது கிடையாது”
இதையும் படிங்க : இந்திய அணி முதல் டெஸ்ட்டை வெல்ல முடியுமா.. தோல்வியை தவிர்க்க என்ன செய்யணும்?.. இங்கிலாந்து திடீர் முன்னிலை
“எல்லோருமே இதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். விளையாட்டில் இப்படி நடப்பது என்பது சகஜம்தான். இதற்காக கோபமாக இருக்கிறேன், உதைக்கிறேன் என பீல் கிரியேட் செய்து அவர்கள் மேல் அழுத்தத்தை உண்டாக்கவும் கூடாது. எங்கள் வீரர்கள் இப்படியான அனுபவங்களில் இருந்து தொடர்ந்து கற்றுக் கொள்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.






