பும்ரா தன் காயம் குறித்து மீடியாக்கள் வெளியிட்டு வரும் விஷயங்கள் குறித்து, கொஞ்சம் கோபமாகவும் அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தற்போது பும்ரா இவ்வாறு பதிலடி கொடுத்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது என்று கூறலாம். ஏனென்றால் அவர் காயம் குறித்து மிகப்பெரியதாக மீடியாக்கள் எழுதியும் பேசியும் வந்த நிலையில் இந்த பதிலடி அவர் திரும்பி வருவதற்கான நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
பும்ராவின் காயம் பற்றி வந்த செய்திகள்
பும்ராவுக்கு கிரேடு 3 லெவல் காயம் இருப்பதாகவும் இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களில் அவர் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் சுற்று போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. அவர் நேராக அரை இறுதி போட்டிக்கு மட்டுமே வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்னும் சில மீடியாக்கள் அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக, அவரை படுக்கையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் ஒட்டுமொத்தமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார் என்றும் செய்திகளை பரப்பி வந்தார்கள். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் வருத்தம் அடைய வைத்திருந்தது.
பும்ரா தந்த பதிலடி
இந்த நிலையில் பும்ரா தனக்கு முதுகு பகுதியில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த நியூசிலாந்து மருத்துவரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் செய்திகள் தெரிவித்தனர். இப்படி அவரை சுற்றி அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தொடர்ந்து தினமும் வந்து கொண்டே இருந்தது. தற்போது இதற்கு பும்ரா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய டிரெஸ்ஸிங் ரூம் விஷயத்தை.. வெளிய கசிய விட்டது இந்த வீரர்தான்.. கம்பீர் கோபம் – வெளியான தகவல்கள்
இந்திய மீடியாக்கள் தன் காயம் குறித்து வெளியிட்டு வரும் செய்திகள் பற்றி எழுதியுள்ள பும்ரா அதில் தெரிவிக்கும் பொழுது ” போலியான செய்திகளை பரப்புவது எளிதான விஷயம் என்று எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் கூட அந்த செய்திகள் என்னை சிரிக்க வைத்தன. அவர்கள் வெளியிட்ட ஆதாரங்கள் நம்ப முடியாத அளவுக்கு போலியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






