இன்று டி20 உலகக் கோப்பையின் முதல் நாளில் கடைசி போட்டியில் இந்திய அணி யுஎஸ்ஏ அணியை மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா விளையாடவில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஎஸ்ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. அதிரடி வீரர்கள் இருப்பதால் சிறிய அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
பும்ரா ஏன் விளையாடவில்லை?
நேற்றிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் விளையாடுவது சந்தேகம் எனவும், அவர் விளையாடுவாரா இல்லையா? என்பதை கடைசி நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்றும் செய்திகள் வெளியில் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று டாஸ் நிகழ்வில் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் டாஸ் வென்று இருந்தால் தாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்ததாகவும், அதே சமயத்தில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இன்று பும்ரா விளையாட மாட்டார் என்றும் அறிவித்திருக்கிறார். அவருக்கு காய்ச்சல் என்று வந்த செய்திகள் உறுதியாகி உள்ளது.
சிராஜுக்கு அடித்த ஜாக்பாட்
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தில் முகமது சிராஜ் பெயர் கிடையாது. இந்த நிலையில் பேட்டிங் ஆல் ரவுண்டர் ஹர்ஷித்,ராணா திடீரென காலில் காயமடைந்த காரணத்தினால், அவருடைய இடத்திற்கு முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : 20 ரன் 5 விக்கெட்.. ரொமாரியோ செப்பர்டு அசத்தல் ஹாட்ரிக்.. வெஸ்ட் இண்டீஸ் வேற லெவல் வெற்றி.. ஸ்காட்லாந்து தோல்வி
இந்த நிலையில் தற்போது முதல் போட்டியில் பும்ரா காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால் சிராஜிக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த அவருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால் திடீரென அவருக்கு இரண்டு ஜாக்பாட் அடித்து இப்பொழுது விளையாடும் அணியிலும் இடம் பிடித்து விட்டார்.






