20 ரன் 5 விக்கெட்.. ரொமாரியோ செப்பர்டு அசத்தல் ஹாட்ரிக்.. வெஸ்ட் இண்டீஸ் வேற லெவல் வெற்றி.. ஸ்காட்லாந்து தோல்வி

0
5
WI

இன்று டி20 உலகக் கோப்பையின் முதல் நாளில் இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஷாய் ஹோப் 22 பந்துகளில் 19 ரன்கள், பிரண்டன் கிங் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து மெதுவான துவக்கத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

பின்னி எடுத்த ஹெட்மயர்

இதற்கு அடுத்து வந்த சிம்ரன் ஹெட்மயர் 36 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ரோமன் பவல் 14 பந்தில் 24 ரன்கள், ரூதர்போர்ட் 13 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எட்ட முடியாத நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் பிராட் கூரி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

செப்பர்ட் ஹாட்ரிக்

இதைத்தொடர்ந்து விளையாட வந்த கேப்டன் பெரிங்டன் 24 பந்துகளில் 42 ரன்கள், டாம் புரூஸ் 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பயத்தை உருவாக்கினார்கள். இதைத் தொடர்ந்து 14வது ஓவரை வீச வந்த ரொமாரியோ செப்பர்ட் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். மேலும் அந்த ஓவரில் இன்னொரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : பாபருக்கு சிக்ஸ் அடிக்கிற சக்தியே கிடையாது.. நீ சவாலா சொன்னது என்னப்பா ஆச்சு – முகமது கைஃப் கேள்வி

இறுதியில் ஸ்காட்லாந்து அணி 147 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ரொமாரியோ செப்பர்டு மூன்று ஓவர்களில் 20 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -