பும்ரா ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்.. ஆனா எனக்கு எதுக்குனே தெரியல – டெம்பா பவுமா பேட்டி

0
158
Bavuma

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டார்கள் என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி முழுமையாக வென்று சாதனை படைத்தது. மேலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

களத்தில் நடந்த சம்பவம்

இந்த டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா பேட்டிங் செய்த பொழுது பும்ரா பந்துவீச்சில் காலில் பந்தை வாங்கினார். இந்த நிலையில் நடுவர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. எனவே ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா இது குறித்து களத்தில் உரையாடும் பொழுது டெம்பா பவுமா குள்ளமானவர் எனவே அவுட் ஆகி இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என பேசிக் கொண்டார்கள். இது அந்த நேரத்தில் உருவக் வேலை செய்ததாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டெம்பா பவுமா பேசும் பொழுது “என் பக்கத்தில் பார்த்தால் ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா அவர்களுடைய மொழியில் என் குறித்து ஏதோ ஒன்று பேசிய சம்பவம் நடைபெற்று இருந்தது. இது மட்டுமே தான் எனக்கு தெரியும். அன்றைய போட்டி நாள் முடிவில் இருவருமே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்”

- Advertisement -

ஏன் என்று தெரியாது

“அவர்கள் இருவரும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்ட பொழுது, அவர்கள் எதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் என்று எனக்கு முழுமையாக தெரியாது. இதனால் எங்கள் அணியின் ஊடக மேலாளர் இடம் சென்று எதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்”

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. எங்க கிட்ட இன்னொரு டீம் இருக்கு.. ஆகாஷ் சோப்ராவின் 2வது இந்திய அணி – சுவாரசிய லிஸ்ட்

“மைதானத்தில் நடப்பது எப்பொழுதும் அங்கேயே முடிந்து விடும். ஆனால் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். அதை பகைமையாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்கமாக உந்துதலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்த விஷயத்தில் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -