டி20 உலக கோப்பை.. எங்க கிட்ட இன்னொரு டீம் இருக்கு.. ஆகாஷ் சோப்ராவின் 2வது இந்திய அணி – சுவாரசிய லிஸ்ட்

0
236
Jaiswal

தற்போது டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாத வீரர்களின் வைத்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது இந்திய அணியை வெளியிட்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு டி20 உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிட்டது. இதில் சில முக்கியமான இந்திய வீரர்கள் இடம் பெறவில்லை. அப்படி இடம்பெறாத வீரர்களை வைத்து ஆகாஷ் சோப்ரா ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்.

- Advertisement -

பலம் வாய்ந்த பேட்டிங் யூனிட்

அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள். அதற்கடுத்த இரண்டு இடங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் வருகிறார்கள். மேலும் ஐந்தாவது இடத்தில் ஜிதேஷ் சர்மா இடம் பெறுகிறார்.

இத்துடன் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களுக்கு ஆல்ரவுண்டர்கள் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் இடம் பெறுகிறார்கள். இதற்கடுத்து எட்டாவது இடத்திற்கு பேட்டிங் செய்யக்கூடிய தீபக்சகர் அல்லது புவனேஸ்வர் குமாரை தேர்வு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

முக்கிய இரண்டு வீரர்கள்

இதைத்தொடர்ந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் இடம் பெறுகிறார்கள். மேலும் பிரதான சுழல் பந்துவீச்சாளராக சகல் வருகிறார். மேலும் பேட்ஸ்மேன்களுக்கான பேக்கப் வீரராக கே எல் ராகுல் இடம்பெற்று இருக்கிறார். இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த அணியும் வலிமையானதாக இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை.. ஏலத்தில் விலை போகாத வீரர் இரட்டை சதம்.. சாதனை விவரம் பட்டியல்

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜிதேஷ் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, க்ருனால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் மற்றும் கே.எல்.ராகுல்

- Advertisement -