“அஸ்வினை கொண்டு வந்தது இதுக்குதான்.. டீம்ல எடுக்கிறது கஷ்டம்” – அமித் மிஸ்ரா புதிய கோணத்தில் பரபரப்பு பேச்சு!

0
1444
Ashwin

இந்திய அணி தற்பொழுது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உள்நாட்டில் உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது!

இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியும் இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் தற்பொழுது அக்சர் படேல் காயம் அடைய, அவரது இடத்தில் ஒரு ஆப் பின்னர் வருவாரா? குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆப் ஸ்பின்னர் இடம்பெறுவாரா? என்ற எதிர்பார்ப்புமிக்க கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நாளை பஞ்சாப் பாந்த்ரா மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி துவங்க இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணியில் அஸ்வின் நிலை என்ன என்று பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சிலர் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பல முக்கியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“அஸ்வின் சந்தேகமே இல்லாமல் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். மேலும் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். ஆனால் இது 20 ஓவர் போட்டி அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது 50 ஓவர் போட்டி.

தற்பொழுது அவரை அணியில் எடுத்திருப்பதற்கான காரணமே, வீரர்கள் யாராவது காயமடைந்தால் அந்த இடத்தில் வைத்துக் கொள்ளத்தான். மற்றபடி எதுவும் இல்லை.

அணியில் ஏற்கனவே இரண்டு இடதுகை சுழற் பந்து வீச்சாளர்கள் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று பேர் இருக்கிறார்கள். இதன் காரணமாக அஸ்வின் ஒரு ஆப் ஸ்பின்னர் ஆக ஒரு எட்ஜ் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எப்படி பந்து வீசுகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும். இந்த வடிவத்தில் இன்னும் அவருக்கு விக்கெட் எடுக்கும் திறன் இருக்கிறதா என்று மதிப்பிடும்.

அஸ்வின் அணியில் இல்லாததற்கான காரணம் அவரது பீல்டிங் மற்றும் அவர் வலது கை வீரர்என்பது மட்டுமே. ஜடேஜா அக்சர் இருவரும் இடது கை வீரர்களாக இருக்கிறார்கள்.

மேலும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட, பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்ற கூடியவராக, நன்றாக பீல்டிங் செய்யக்கூடியவராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது மிகவும் முக்கியமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!