இந்திய கிரிக்கெட்

ஆஸியில ஜெய்ஸ்வால் இந்த ஒரு மாற்றத்தை செஞ்சே ஆகணும்.. மத்தபடி வேற லெவல் பையன் – பிரையன் லாரா அறிவுரை

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய வேண்டும் என லெஜெண்ட் பிரையன் லாரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 இரட்டை சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உடன் 66.35 ரன் ஆவரேஜில் 929 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவராகவும் இருக்கிறார்.

பிரையன் லாராவின் சிறப்பு அறிவுரை

ஜெய்ஸ்வால் குறித்து பேசி உள்ள பிரையன் லாரா ” ஜெய்ஸ்வால் எந்த சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய திறமையை பெற்றவராக இருக்கிறார். நான் அவரை எங்களுடைய நாட்டில் கரீபியனில் பார்த்தேன். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் நீங்கள் உங்களிடம் இருக்கும் வலிமையை நம்பி அதை எடுத்துக் கொண்டு விளையாடினால், நீங்கள் சிறப்பாக விளையாடுவீர்கள்”

” சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வது என்பது உங்களுடைய திறமையை நீங்கள் நம்பி விளையாடுவது என்பதுதான். நான் இதை கொஞ்சம் உப்பு சேர்த்து சொல்கிறேன். ஏனென்றால் இந்தியாவிலும் தற்போது சூழ்நிலைகள் மாறிவிட்டது. ஐபிஎல் தொடர் மூலமாக இளம் இந்திய வீரர்களுக்கு நல்ல போட்டி கிடைக்கிறது. இதனால் அவர்கள் அங்கேயே எல்லா சூழ்நிலைக்கும் விளையாடும் படி தயாராகி விடுகிறார்கள். எனவே அட்ஜஸ்ட்மென்ட் என்பது மனநிலையில் இருக்க வேண்டும். இதுதான் ஜெய்ஸ்வாலுக்கு தேவை”

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவும் சிறந்தவராக இருக்கிறார்

மேலும் பேசிய பிரையன் லாரா கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் இளம் வயதாகவும் இடதுகை ஆட்டக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பாணியில் மிகவும் ஸ்டைலாக தாக்கி விளையாடுகிறார்கள். இருவருமே மிகவும் உற்சாகமான இந்திய பேட்டர்கள்”

இதையும் படிங்க : 556 ரன்.. 3 சதங்களுடன் மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட சோகம்.. 2வது நாளில் தடுமாற்றம்

“நிச்சயமாக இந்த இரண்டு இளைஞர்களுடனும் இரண்டு வருடங்களாக கிரிக்கெட் ரீதியாக நான் கொண்டு இருந்த உறவு மிகவும் அற்புதமானது. அவர்கள் தங்களுடைய வலிமையிலிருந்து மேலும் பலமாக செல்வதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by