556 ரன்.. 3 சதங்களுடன் மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட சோகம்.. 2வது நாளில் தடுமாற்றம்

0
258
Pakistan

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து இருக்கிறது.

இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

253 ரன் மெகா பார்ட்னர்ஷிப்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் நாளில் கேப்டன் ஷான் மசூத் 151, துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 101 ரன்கள் எடுத்து சிறந்த துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 338 பந்துகளில் 253 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் விளையாடிய பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் சவுத் ஷகீல் 82, ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தார்கள். ஜாக் லீச் 3, பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு அணிக்கு ஏற்பட்ட சோகம்

இங்கிலாந்து அணிக்கு காயம்பட்ட துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் களமிறங்கவில்லை. இதன் காரணமாக கேப்டன் உள்ளே போப் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வெறும் இரண்டு பந்துகள் மட்டும் சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதையும் படிங்க : இன்னும் 39 ரன்.. விராட்டின் மகத்தான சாதனையை தொடும் சூரியகுமார்.. மேலும் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு

இதைத்தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 64 பந்தில் 11 பவுண்டரிகள் உடன் 64 ரன்கள், நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 54 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து 460 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நாளை முழுவதுமாக இங்கிலாந்து அணி விளையாடினாலே இந்த போட்டி டிரா ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -