இந்திய கிரிக்கெட்

சச்சின் கிடையாது.. இந்த இந்திய பவுலருக்கு பந்து வீசவே வெறுப்பா இருந்தது.. திருப்பி தந்தார் – பிரட் லீ பேச்சு

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு தன்னால் பந்து வீச முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அசுர பலத்தில் விளங்கிய காலகட்டத்தில் அந்த அணியின் பலத்திற்கு பிரட் லீ மிகவும் முக்கியமான ஒருவராக இருந்தார். அப்படியான வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியின் வந்து வீச்சாளர் ஒருவருக்கு பந்து வீச கடினமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு சவால் கொடுத்த இந்திய அணி

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த அணியாக இருந்த காலகட்டத்தில் அந்த அணிக்கு தென் ஆப்பிரிக்கா அணி சில நேரங்களில் சவால் கொடுத்திருந்தாலும் கூட, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெரிய வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணியே இருந்திருக்கிறது.

அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கங்குலி தலைமையில் இந்திய அணிகள் அறிமுகம் ஆகிய இளம் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் பெரிய தொல்லை கொடுப்பவர்களாக இருந்து வந்தார்கள். 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது இப்போது வரலாற்று தொடராக இருக்கிறது.

- Advertisement -

வெறுப்படைய வைப்பார்

இது குறித்து பிரட் லீ கூறும் பொழுது “நான் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்குக்கு பந்து வீசுவதை வெறுக்கிறேன் ஏனென்றால் அவர் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைப்பார். இதை நான் அவரிடம் ஒருமுறை சொல்லி இருக்கிறேன். அவர் சந்தேகமே இல்லாமல் ஒரு லெஜெண்ட் வீரர். நான் அவருக்கு பந்து வீசும் பொழுது விரக்தி அடைந்து இருக்கிறேன். இது அவருக்கும் தெரியும்”

இதையும் படிங்க : 17 வருடங்கள்.. ஒரே அணியில் விராட் பாபர்.. மீண்டும் வரும் வரலாற்று தொடர்.. தோனியின் காலம் திரும்புகிறது

“அவர் என்னையும் ஸ்லட்ஜ் செய்வார். நான் அவரைப் போட்டியில் சீக்கிரம் வெளியே அனுப்பி விடுவேன் என்று கூறுவேன். ஆனால் என்னால் ஒருமுறை கூட அவரை சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க வைக்க முடியவில்லை. நாங்கள் என்ன செய்தாலும், அதை அப்படியே அவர் எங்களுக்கு திருப்பிக் கொடுப்பவர் ஆகவே இருந்திருக்கிறார். ஏனென்றால் அப்படி செயல்படுவதின் மூலம் அவர் தன்னை சிறப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts