சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கான வாய்ப்பு 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உருவாகி இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் சில காரணங்களால் தனிப்பட்ட முறையில் இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட தொடர்களில் விளையாடுவதில்லை. இதன் காரணமாக இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது. மேலும் இரண்டு நாடுகளும் மீண்டும் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
இரண்டு முறை நடந்த வரலாற்று தொடர்
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகளின் வீரர்களைக் கொண்டு ஆப்ரோ ஆசியா கப் தொடர் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வே மாதிரியான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியிலும், ஆசியாவில், இந்தியா பாகிஸ்தான் இலங்கை போன்ற கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒரு அணியிலும் இருந்து எதிர்த்து விளையாடுவார்கள்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மூன்று போட்டியையும் ஆசிய லெவன் அணி கைப்பற்றி அசத்தியது. தோனி மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு கென்யாவில் நடத்தப்பட இருந்த இந்த தொடர் ஒளிபரப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் நிறுத்தப்பட்டது.
மீண்டும் வரும் ஆப்ரோ ஆசியா தொடர்
இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் ஆப்ரோ ஆசியா தொடர் நடத்தப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியங்கள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமும் விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் நடைபெறும் பொழுது ஆசிய லெவல் அணியில் விராட் கோலி, பாபர் அசாம், ரோகித் சர்மா, முகமது ரிஸ்வான் போன்ற வீரர்கள் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள்.
இதையும் படிங்க : கேஎல் ராகுலை சீக்கிரத்தில் அனுப்புவோம்.. மெயின் போட்டிக்கு முன்னவே ஆரம்பிக்கப் போகுது – ஆஸி ஸ்காட் போலந்து பேச்சு
ஆப்ரோ கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான முக்லானி இது குறித்து கூறும் பொழுது “ஆப்ரோ ஆசியா கிரிக்கெட் தொடர் நம்முடைய அமைப்புக்கு பெரிய அளவில் நிதியா ஆதாரத்தை கொண்டு வருகிறது. மேலும் இந்த தொடரை நடத்த இரண்டு கிரிக்கெட் கவுன்சில்களும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது.நாங்கள் இது குறித்து எங்கள் சகாக்களுடன் சேர்ந்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் சேர்ந்து விவாதித்தோம். ஆப்ரோ ஆசியா கப் தொடர் மீண்டும் புத்துயிர் பெற அனைவரும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.






