உலக கிரிக்கெட்

நல்லவேளை ஆஸி தப்பிச்சாங்க.. இவர் மட்டும் இல்லன்னா எங்க டீம் இனி அவ்ளோதான் – பிரட்லீ பேட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அது குறித்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீ சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

தங்களது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த முறை பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்போடு விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று மூன்றாவது போட்டியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டது. ஆனால் எதிர்பாராத மழையின் காரணத்தால் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜாஸ் ஹேசில்வுட் காயத்தின் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓவருடன் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா ஸ்காட் போலந்தை பெற்றிருப்பது அதிர்ஷ்டவசமான விஷயமாகும் என்று பிரெட் லீ சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவரைப் பெற்றிருப்பது ஆஸ்திரேலியாவின் அதிர்ஷ்டம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜாஸ் ஹேசில்வுட் எந்த நேரத்திலும் பிட்டாக இருந்தால் அவர் எனது பிளயிங் லெவனில் நிச்சயமாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார். ஏனென்றால் அவரது புள்ளி விவரம் அதை தெளிவாக கூறுகிறது. அவர் ஒரு சிறந்த அணி வீரர் மற்றும் மெக்ராத்தை போன்றவர். அவரது லைன் அண்டு லெந்த் மிக அற்புதமாக இருக்கும். மறுபுறம் அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியில் ஒரு பெரிய ஓட்டையை விட்டுவிட்டார்.

இதையும் படிங்க:பும்ரா இந்த லெஜன்ட்டின் வலது கை வெர்ஷன்.. இவருக்கு எதிரா விளையாட வெறுக்கிறேன் – ஆஸி ஜஸ்டின் லாங்கர் பேட்டி

ஆனால் அந்த ஓட்டை ஸ்காட் போலண்டால் தற்போது நிரப்பப்படும். ஆஸ்திரேலியா அணியின் அதிர்ஷ்டம் போலந்து தற்போது அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார், ஆனால் அவர் காயத்தால் இல்லாமல் போனது ஒரு பெரிய இழப்பு” என்று அவர் கூறி முடித்திருக்கிறார். ஸ்காட் போலந்து இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts