விராட்டை வீழ்த்தினாலும்.. போலண்ட் 3வது டெஸ்டில் வேண்டாம்.. அவர் வார்னே காலத்து மெக்கில் – பிரட் லீ கருத்து

0
1710
Boland

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருந்த பொழுதும் ஸ்காட் போலண்ட் வேண்டாம் என ஆஸ்திரேலியா முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இருந்தபோதிலும் அவர் மூன்றாவது டெஸ்டில் இடம்பெற வேண்டாம் என பிரட் லீ வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

18 மாதம் கழித்து திரும்பிய ஹேசில்வுட்

சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு 18 மாதங்கள் கழித்து வந்த ஹேசில்வுட் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார். பிறகு ஏற்பட்ட சிறிய காயத்தின் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற முடியவில்லை.

இதன் காரணமாக முதல் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியில் அவரால் வெற்றியில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு உடல் தகுதி பெற்றிருந்தால் அவரே விளையாட வேண்டும் ஸ்காட் போலண்ட் விளையாடக்கூடாது என பிரட் லீ கூறி இருக்கிறார்.

- Advertisement -

வார்னே காலத்து மெக்கில்

இது குறித்து பிரட் லீ கூறும் பொழுது “இது ஒரு கடினமான முடிவுதான். ஆனால் நீங்கள் திரும்பி ஹேசில்வுட் இடம் செல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் உடல் தகுதி பெற்று இருந்தால் நேராக அணிக்கு திரும்புகிறார். மேலும் புதிய பந்திலும் அவர் பந்து வீசுவார். ஒருவேளை குறைந்தபட்சம் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்”

இதையும் படிங்க : இந்திய அணியின் எதிர்காலத்திற்காக.. ரோகித் சர்மா இந்த தியாகத்தை செய்யணும் – புஜாரா வலியுறுத்தல்

“இதற்காக ஸ்காட் போலண்ட் திறமையற்றவர் என்பது கிடையாது. அவர் வார்னே காலத்து மெக்கில் போன்றவர். வார்னேவுக்கு காயம் ஏதாவது ஏற்பட்டாலோ அல்லது தனிப்பட்ட காரணத்தினால் அவர் விளையாடவிட்டாலோ மட்டும்தான் மெக்கிலுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்தும் அவர் 200 விக்கெட் கைப்பற்றினார். போலன்ட் அவரைப் போன்ற ஒருவர். அவர் சிறந்த மூன்று ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கும் காலத்தில் இருக்கிறார். எனவே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது கடினம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -