“என்னை மூளைச் சலவை செய்தார் – ராகுல் டிராவிட் உடனான சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

0
2201

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்கள் ஆல் அவுட் ஆனது . இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா ஆட்டநேரம் முடிவில் 80 ரண்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 60 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் அஸ்வின் கைப்பற்றி இருப்பது இது 33 வது முறையாகும் .

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை கடந்திருக்கிறார் அஸ்வின். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் . இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 67 முறை ஐந்து விக்கீட்டுகளுக்கு மேல் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அஸ்வின் இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அஸ்வின் ” என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் இருந்தது ஆனால் அதற்குள்ளாக 14 ஆண்டுகள் மிகவும் வேகமாக சென்று விட்டது. இந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு வேகமாக சென்றிருக்கிறது” என தெரிவித்தார்,

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த நேரத்தில் ராகுல் டிராவிட் ஒருமுறை என்னிடம் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் . அவர் பயிற்சியாளராக இந்திய அணிக்கு வந்த போது சொன்னார் நாம் எவ்வளவு ரன் அடித்திருக்கிறோம் எத்தனை விக்கெட்களை எடுத்திருக்கிறோம் இவையெல்லாம் ஒரு நாள் மறந்து போகும் . ஆனால் நம் அணியினருடன் நாம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே என்றும் நம் நினைவில் இருக்கும். ஒரு அணியாக நாம் உருவாக்கும் சில மறக்க முடியாத தருணங்கள் தான் என்றும் நம் நினைவில் இருக்கக் கூடியவையாக இருக்கும்” என்று தெரிவித்தார்,

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய அஸ்வின் ” ராகுல் டிராவிட் கூறியதற்கு நேர் எதிரான கருத்து என்னுடையது. ஆனால் அவர் என்னை மூளைச்சலவை செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் . இந்த 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வையும் என்னால் ஞாபகப்படுத்தி பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு காலம் வேகமாக சென்று விட்டதாக உணர்கிறேன். என்றுமே கிரிக்கெட்டிற்கு கடமைப்பட்டிருக்கிறேன் . என் வாழ்வில் நான் பெற்ற அனைத்தும் கிரிக்கெட்டால் வந்தது எனக்கு தெரியவில்லை இன்னும் எத்தனை மறக்க முடியாத அனுபவங்கள் எனக்கு வரப்போகிறது என்று ஆனால் வரப் போகின்ற அனைத்தையும் ரசித்து அனுபவிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்

மேலும் கொரோனா காலகட்டம் முடிந்து கிரிக்கெட் துவங்கும் போது கிரிக்கெட்டில் நடைபெறுகின்ற அனைத்து விஷயங்களையும் ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் . அது வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி நான் அணியில் விளையாடினாலும் சரி இல்லை அணியில் இருந்து என்னை நீக்கினாலும் சரி . ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவித்தார் .