இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடக்க இருக்கும் செமி பைனல் போட்டியில் இந்திய அணிக்கு அதிக அழுத்தம் இருப்பதாகவும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதை தான் பார்ப்பதாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹேடின் கூறியிருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் செமி பைனல் சுற்றுக்கு வந்திருக்கிறது. இன்று ஒரு போட்டியில் துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. மேலும் இந்த போட்டிக்கு இதுவரை பயன்படுத்தாத புதிய ஆடுகளத்தை கொடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணியின் மீது அழுத்தம் இருக்கிறது
இது குறித்து பிராட் ஹேடின் கூறும்பொழுது ” ஒரே இடத்தில் ஒவ்வொரு போட்டியையும் ஆடிய தனித்துவமான இடத்தில் இந்திய அணி இருக்கிறது. மேலும் ஆடுகளத்தில் பெரிய அளவில் புற்கள் இல்லை. ஆடுகளம் கடினமாகவும் இருக்கிறது. இது இந்திய அணிக்கு எல்லா வகையிலும் ஏற்றது. இப்படி எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாக இருப்பது இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது”
“ஆஸ்திரேலியா தனக்கான ஆட்டத்தை அமைத்து விட்டது. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். இந்தத் தொடரில் அவர்கள் தன்னுடைய இடத்தை உறுதி செய்து இருக்கிறார்கள். ஆனால் இது ஒரு போட்டியில் வெல்வது பற்றியது. இதை ஆஸ்திரேலியா செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நான் பார்க்கிறேன்”
எங்களுக்கு எதுவும் கிடையாது
“ஆஸ்திரேலியர்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று நான் நினைக்கவில்லை. அழுத்தத்தை அவரவர் வழியில் இரு அணிகளுமே வைத்திருக்கிறார்கள். இது ஒரு அப்செட் ஆக இருக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தற்போதுள்ள கண்டிஷனில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்துவதை நான் பார்க்கிறேன். குறிப்பாக இந்தப் போட்டி நடக்கும் இடத்தை வைத்து நான் சொல்கிறேன்.
இதையும் படிங்க : என் கணிப்பு சரியா இருந்தா.. ஆஸி அணிக்கு இந்த பிளான்தான் ரோகித் வைத்திருப்பார் – அனில் கும்ப்ளே பேட்டி
“இந்திய அணி கடந்த ஆறு மாதங்களில் பெரிய வெற்றிகளை பெற்ற அணியாக இல்லை. எனவே இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்திய அணிக்கு பெரிய அழுத்தம் இருக்கும். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராவிட்டால் அது பெரிய எதிர்வினைகளை கொண்டு வரும். எனவே இதன் காரணமாக இந்திய அணிக்கு அழுத்தம் இருப்பதை நான் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.