என் கணிப்பு சரியா இருந்தா.. ஆஸி அணிக்கு இந்த பிளான்தான் ரோகித் வைத்திருப்பார் – அனில் கும்ப்ளே பேட்டி

0
568

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவதாக அரைஇறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் திட்டம் குறித்து முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலாவது அரை இறுதி ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது. ஏற்கனவே இந்திய அணி இங்கு மூன்று லீக் போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், இந்த ஆட்டமும் ஒரே மைதானத்தில் நடைபெறுவதால், மைதானத்தின் சூழ்நிலையை அறிந்து கொள்ள இந்திய அணிக்கு ஓரளவு எளிதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டியில் வலுவான நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 சுழற்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கிய இந்திய அணிக்கு கைமேல் பலனும் கிடைத்தது. நேற்றைய போட்டியில் இந்த தொடரில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் அணில் கும்ப்ளே ரோஹித் சர்மாவின் பிளேயிங் லெவன் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் திட்டம்

இதுகுறித்து அணில் கும்ளே விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மைதானத்தின் சூழல் மாறப்போவதில்லை என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக மைதானம் எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் அடுத்த போட்டியில் இருக்கப் போகிறது. இந்திய அணி 4 சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் எனவும், வருண் சக்கரவர்த்தி நிச்சயமாக விளையாடுவார் எனவும் தோன்றுகிறது. ஒரே வாய்ப்பு முகமது சமியாக இருக்கலாம், ஆனால் அவருக்கு தோளில் சிறிய அடிபட்டது உண்மைதான், ஆனால் பந்து வீசும் போது அவர் நன்றாக உணர்ந்தார்.

இதையும் படிங்க:இதை மட்டும் யாராவது செய்யுங்க.. போட்டியின் திருப்பு முனையே அதுதான்.. இந்திய வீரர்களுக்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் வேண்டுகோள்

எனவே அது ஒரு பிரச்சினையாக இருக்காது. எனவே இந்திய அணி அதே 11 வீரர்களோடு தான் களமிறங்கும். இந்த மைதானத்தின் சூழ்நிலை நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக நான்கு பொருந்தும். நான்கு பேருமே சிறந்த பந்துவீச்சாளர்கள். எனவே 40 ஓவர்கள் சுழல், 20 ஓவர்கள் வேகப்பந்துவீச்சு என கூடுதல் அம்சம் இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு பிரச்சனை இருக்காது. இதுகுறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -